வியாழன், 22 செப்டம்பர், 2022

ஆதார் கார்டு போட்டோ ஆன்லைனில் மாற்றுவது எப்படி? 7 சிப்பிள் ஸ்டெப்ஸ்

 ஆதார் அட்டை மிக முக்கிய ஆவணமாக மாறிவிட்டது. வங்கி, வருமான வரி தாக்கல், வாக்காளர் அடையாள அட்டை, செல்போன் பயன்பாடு, ரயில் டிக்கெட் என அனைத்து பயன்பாட்டிற்கும் ஆதார் முக்கிய ஆவணமாக மாறிவிட்டது. முன்பு ரேஷன் கார்டு இருந்தது போல் ஆதார் அட்டை இப்போது மாறிவிட்டது. இந்திய குடிமகன் என்பதற்கு ஆதார் அட்டை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் நாம் ஏதேனும் மாற்ற வேண்டிய நிலை இருக்கலாம். வீட்டு முகவரி, செல்போன் எண், புகைப்படம் என ஏதேனும் மாற்ற வேண்டியதாக நினைக்கலாம். இவற்றை எல்லாம் சுலபமாக வீட்டிலிருந்த படியே மாற்றிக் கொள்ளலாம். அந்தவகையில், பலருக்கும் தங்கள் ஆதாரில் உள்ள புகைப்படம் பிடிக்காமல் மாற்ற வேண்டும் என நினைக்கலாம். ஆதாரில் புகைப்படம் மாற்றுவது எப்படி என்பது குறித்து step-by-step ஆக இங்கு பார்க்கலாம்.

Step 1: முதலில் ஆதார் அதிகாரப்பூர்வ இணையதளமான UIDAI website – uidai.gov.in செல்ல வேண்டும்.

Step 2: அதில், ஆதார் பதிவு படிவத்தை (Aadhaar enrollment) தேடி டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்.

Step 3: படிவத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து அருகில் உள்ள ஆதார் பதிவு மையம் அல்லது ஆதார் சேவா கேந்திராவில் (Aadhaar Sewa Kendra) சமர்ப்பிக்கவும்.

Step 4: அங்குள்ள ஆதார் நிர்வாகி அனைத்து விவரங்களையும் பயோமெட்ரிக் முறையில் சரிபார்த்து உறுதி செய்வார்.

Step 5: இப்போது, நிர்வாகி உங்கள் ஆதார் அட்டையில் புதுப்பிக்கப்பட வேண்டிய படத்தைக் கிளிக் செய்துவார்.

Step 6: சேவை கட்டணமாக ஜிஎஸ்டியுடன் ரூ.100 வசூலிக்கப்படும்.

Step 7: இப்போது, ஆதார் நிர்வாகி ஒப்புகை சீட்டு வழங்கி புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை Update Request Number (URN)வழங்குவார்.

UIDAI-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் URN எண்ணைப் பயன்படுத்தி உங்களின் ஆதார் அட்டை அப்டேட் செய்யப்பட்ட நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்.

மேலும், ஆதார் அட்டை புகைப்படம் அப்டேட் ஆக 90 நாட்கள் வரை ஆகலாம். process முடிந்ததும், ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று அல்லது UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ஆதார் நகலை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

source https://tamil.indianexpress.com/technology/how-to-update-aadhaar-card-photo-step-by-step-guide-513337/