பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தனிநபர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி யூயூ லலித் தலைமையிலான அமர்வு செப்டம்பர் 13ஆம் தேதி முதல் விசாரித்து வருகிறது.
இந்த அமர்வின்போது திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “உயர் சாதி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளித்தல் என்பது கேலிக்கூத்து” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், மத்துவம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதி.
சட்டத்தின் முன் மற்றும் வாய்ப்புகளின் அடிப்படையில் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும் திமுக வாதிட்டது.
தொடர்ந்து, “உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு அளித்தல், தற்போதைய இடஒதுக்கீடு சட்டம் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திமுகவின் கருத்துப்படி சமூக நீதி, பொருளாதார நீதி இரண்டும் வேறுபட்டவை. இடஒதுக்கீடு என்பது சமூக சமத்துவத்தை அடையும் நோக்கத்தில் அரசியல் சட்டப்படி ஏற்படுத்தப்பட்டதாகும்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன், இந்திய சமூகம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளாக ஜாதிப் பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து இதை அரசியலமைப்பு உருவாக்கியவர்கள் நம்பியதால், சமத்துவத்தை உண்டாக்க இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்றார்.
பல உறுப்பினர்கள் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக இருந்த முதல் பாராளுமன்றம், ஏற்கனவே உறுப்புரை 16ல் உள்ளடக்கப்பட்ட வேலை விஷயங்களில் அல்லாமல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஆதரவான திட்டங்களைக் கொண்டு வருவதற்கு 15வது பிரிவில் ஒரு பொதுவான வழிவகை இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தது. எனவே, அரசியலமைப்பு (முதல் திருத்தம்) சட்டம், 1951 நிறைவேற்றப்பட்டது, மேலும் அரசியலமைப்பில் செய்யப்பட்ட முதல் திருத்தம் பிரிவு 15 க்கு உட்பிரிவு (4) ஐச் செருகுவதாகும் என்று வில்சன் குறிப்பிட்டார்.
மேலும், பொருளாதார நிலையின் அடிப்படையில் உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது இடஒதுக்கீட்டைக் கேலிக்கூத்தாக்கும்.
ரசியல் சாசன பெஞ்ச் (இந்திரா சாவ்னி வழக்கு, 1992) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு என்பது முன்னோடி வகுப்பினரின் ஏகபோக சேவைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், இரு வகுப்பினருக்கும் இடையேயான சமூக மற்றும் கல்வி வேறுபாடுகள் அத்தகைய உறுதியான நடவடிக்கையை நியாயப்படுத்தியது என்றும் வில்சன் வாதிட்டார்.
சமூகத்தில் பின்தங்கிய வகுப்பினரை மேம்படுத்துதல் மற்றும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட உறுதியான செயல் திட்டங்களில் நாட்டிலேயே தமிழ்நாடு முக்கியப் பங்காற்றியுள்ளது, உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50% இடஒதுக்கீடு உச்சவரம்பை மீறும் முதல் மாநிலமாகத் திகழ்கிறது.
இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமாக இருக்க முடியாது என்பது உறுதியாகிவிட்டது. வரலாற்றுப் பாகுபாட்டின் தீய விளைவுகளுக்கு இது ஒரு பரிகாரம் அல்லது மருந்தாகும்.
மேலும், கல்வி உதவித்தொகை, இலவச பயிற்சி வகுப்புகள், கல்விக் கட்டணத் தள்ளுபடி போன்றவற்றின் மூலம் ஏழைகளுக்கு உதவுவதற்கு அரசிடம் வேறு வழிகள் உள்ளன.
வறுமையின் பிரத்தியேக அளவுகோல் இடஒதுக்கீட்டுக்கு அடிப்படையாக இருக்க முடியாது. சட்டப்பிரிவு 15(6) மற்றும் 16(6) ஆகியவை இடஒதுக்கீடு என்ற போர்வையில் வறுமை ஒழிப்புத் திட்டங்களாகும், அவற்றை நீடிக்க முடியாது” என்றார்.
தொடர்ந்து, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது 50 சதவீத உச்ச வரம்பை மீறுவது ஆகும். இதையடுத்து, பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினரை சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவில் உள்ளவர்களுடன் ஒப்பிடுவதை நிராகரித்த வில்சன், அவர்கள் மூக பாகுபாட்டை எதிர்கொள்ளவில்லை என்று வாதிட்டார்.
மேலும், மோடி அரசாங்கம் கொண்டுவந்த பொருளாதார நலிவுற்ற ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் பி. வில்சன் கூறினார்.
பொருளாதாரத்தில் நலிவுற்ற சமூகங்களுக்கு இடஒதுக்கீடு 2019ஆம் ஆண்டு நரேந்திர மோடி அரசாங்கம் கொண்டுவந்தது நினைவு கூரத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/10-percentage-ews-quota-a-travesty-dmk-to-sc-512326/