தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. செல்போன் போன்ற தொழில்நுட்ப சாதனங்கள் வளர்ச்சி கண்டு வருகிறது. அந்தவகையில் புதிதாக அறிமுகமாக உள்ள ஐபோன் 14 (iPhone 14) eSIM அம்சத்தை கொண்டுள்ளது. மற்ற பிரீமியம் போன்களிலும் eSIM வசதி கொண்டுவரப்பட உள்ளது. eSIM or embedded SIM எனக் கூறப்படுகிறது. இதற்காக நீங்கள் தனியாக எதுவும் செய்யத் தேவையில்லை. நீங்கள் பயன்படுத்துகிற சிம்மையே eSIM ஆக மாற்றி பதிவு செய்து பயன்படுத்தலாம்.
ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா என எந்த நெட்வொர்க் சிம்மாக இருந்தாலும் eSIM ஆக மாற்றி பயன்படுத்தலாம். eSIM ஆக மாற்றுவது எப்படி என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
ஏர்டெல்
ஏர்டெல் சிம் பயன்படுத்துபவர்கள் முதலில் சிம் பதிவு செய்யப்பட்ட மெயில் ஐடி கொடுத்து எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். “eSIM<>registered email ID” கொடுத்து 121 நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். பின்பு நம்பர் “1” அழுத்தி eSIM மாற்றம் செய்வதற்கு உறுதியளிக்கவேண்டும். 1 நிமிடம் வரை மட்டுமே டைம் அதற்குள் நம்பர் அழுத்தி பதில் அளிக்க வேண்டும்.
குறிப்பு: எஸ்எம்எஸ்-இல் சரியான மெயில் ஐடி கொடுக்கவில்லை என்றால், சரியான மெயில் ஐடி கொடுக்கும்படி மெசேஜ் வரும். அதோடு, மெயில் ஐடி-யை அப்டேட் செய்வதற்கான வழிகாட்டுதலும் உடன் கொடுக்கப்படும்.
இதை செய்தப்பின் confirmation மெசேஜ் வரும், அதோடு ஏர்டெல் நிர்வாகியுடன் பேசி, அவர்கள் கேட்கும் தகவல்கள் கொடுக்க வேண்டும். eSIM மாற்றுவதற்கான தகவல்களை அவர்கள் பெறுவார்கள். அடுத்து, நீங்கள் கொடுத்த மெயில் ஐடிக்கு க்யூ ஆர் கோடு (QR code)அனுப்பபடும்.
இப்போது நீங்கள் இந்த கோடு பயன்படுத்தி உங்கள் eSIM பதிவு செய்து கொள்ளலாம்.
ரிலையன்ஸ் ஜியோ
உங்கள் ஜியோ நம்பருடன் மெயில் ஐடி இணைக்கப்பட்டிருந்தால் eSIM மாற்றுவது எளிது. எனினும் உங்கள் ஐபோனின் EID மற்றும் IMEI எண் பெற வேண்டும். இதற்கு உங்கள் போன் செட்டிங்ஸ் மெனு சென்று General கொடுத்து About பக்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கு கொடுக்கப்பட்டுள்ள 32 இலக்க நம்பர் EID நம்பர் மற்றும் 15 இலக்க நம்பர் IMEI நம்பர். அதுவும் அங்கு கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த 2 நம்பர்களையும் பெற்றப்பின் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதற்கு, “GETESIM <32 Digit EID><15 Digit IMEI>“ கொடுத்து 199 எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இதையடுத்து, 19 இலக்க வெர்சுவல் eSIM நம்பர் மெசேஜ் மற்றும் உங்கள் ஜி மெயிலுக்கு வரும்.
பிறகு, மீண்டும் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதற்கு, “SIMCHG <19 digit eSIM Number>” எனக் கொடுத்து 199 நம்பருக்கு அனுப்ப வேண்டும். eSIM request process-காக 2 மணி நேரம் காத்திருக்க வேண்டும். 2 மணிநேரத்தில் உங்கள் eSIM request உறுதியானதற்கான மெசேஜ் வரும்.
வோடபோன் ஐடியா
வோடபோன் ஐடியா பயனர்கள் தங்கள் சிம்மை eSIM ஆக மாற்ற, “eSIM< space >registered email id” கொடுத்து 199 நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். eSIM மாற்றத்தை உறுதிப்படுத்திக் கொள்ள மீண்டும் ஒரு மெசேஜ் அனுப்பும் படி கூறும். eSIM request process செய்யப்பட்ட பின் உங்கள் மெயில் ஐடிக்கு QR code அனுப்பப்படும்.
இந்த QR code பயன்படுத்தி உங்கள் சிம்மை eSIM ஆக மாற்றி பதிவு செய்து கொள்ளலாம். QR code ஸ்கேன் செய்ய ஐபோனில் செட்டிங்ஸ் மெனு சென்று மொபைல் டேட்டா – Add Data Plan – Scan QR code கொடுத்து process செய்யலாம்.
source https://tamil.indianexpress.com/technology/expressbasics-convert-your-airtel-jio-or-vodafone-idea-sim-to-an-esim-512041/