தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ள என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு தேர்வு விடுமுறையில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 1 முதல் 12-ம் வகுப்புக்கான காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 21 முதல் 30-ம் தேதி வரை மாவட்ட அளவில் நடைபெறவுள்ளது. இதற்கான கால அட்டவணை, வினாத்தாள்கள் ஆகியவை முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் தயாரித்து பள்ளிகளுக்கு வழங்கப்படும். இதில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ‘எண்ணும் எழுத்தும்’ செயலி வழியாக தொகுத்தறி மதிப்பீடு நடத்தப்படும். தொடர்ந்து மாணவர்களுக்கு காலாண்டு, ஆயுதபூஜை விடுமுறை அக்டோபர் 1 முதல் 5-ம்தேதி வரை வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்துக்கான ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி அக்டோபர் 6 முதல் 8-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதற்கேற்ப, விடுமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்புக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டு, அக்டோபர் 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 6 முதல் 12-ம் வகுப்புக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டு, அக்டோபர் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-ம.பவித்ரா
source https://news7tamil.live/good-news-for-students-extension-of-quarter-holidays-for-whom.html