வெள்ளி, 16 செப்டம்பர், 2022

அவர்கள் வேலையின்மை மற்றும் பணவீக்கத்தை விரும்புகிறார்கள்; ப. சிதம்பரம்

 14 09 2022

அவர்கள் வேலையின்மை மற்றும் பணவீக்கத்தை விரும்புகிறார்கள்; ப. சிதம்பரம்   

வணிகம் வேலையின்மையை விரும்புகிறது. குறைந்த எண்ணிக்கையிலான வேலைகளை தேடுபவர்கள்  பலர் இருப்பதால், வேலை வழங்குபவர்களின் பேரம் பேசும் சக்தி அதிகமாக  இருக்கிறது.  இதனால் வேலை தேடுபவர்கள்  ஊதியம்  குறைந்துள்ளது. ஊதிய உயர்வு அற்பமானது. அரசு ஆட்சேர்ப்பு அமைப்புகளும், பொதுத்துறை நிறுவனங்களும்  வேலை எளிதாக கிடைக்காமல் இருப்பதையே விரும்புகின்றன. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை, காங்கிரஸ் கட்சி வேலையின்மை மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக “ஹல்லா போல்”  என்ற பெயருடன்  போராட்டத்துக்கு  சத்தமாக குரல் கொடு என்ற அர்த்தத்தில் ஒரு பேரணியை நடத்தியது. வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கத்தால் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுவதாக சொல்லப் படுகிறது.  வேலையின்மை மற்றும் பணவீக்கத்தை குறைக்க அனைவரும் உறுதியாக இருப்பதாக  அனைவரும் நம்புகின்றனர்.

பரவலாகக் கடைப்பிடிக்கப்படும்  இந்த  நம்பிக்கைகள் சரியானவை அல்ல என இந்த கட்டுரையில் சொல்வதற்காக வருந்துகிறேன். மக்கள் தொகையில் சில பிரிவுகள் உள்ளன . எனவே நீங்கள் மூச்சை கட்டுப்படுத்தி  முடிந்த  அளவு சுதாரித்துக் கொள்ளுங்கள்.  பெருகி வரும் வேலையின்மை மற்றும் உயர்ந்து வரும் பணவீக்கத்தால் அரசில் சிலர் மகிழ்ச்சியடையலாம்.  வேலையின்மை மற்றும் பணவீக்கத்தை மேலும் அதிகரிக்க   அவர்கள் தயாராகவே இருக்கின்றனர்.  எனவே வேலையில்லாத் திண்டாட்டத்தை யார் விரும்புகிறார்கள்?’ என்பதை நாம் பார்க்கலாம். 

வணிகமும் அரசாங்கமும்

வேலையில்லா திண்டாட்டத்தை வணிகர்கள் விரும்புகின்றனர். . குறைந்த எண்ணிக்கையிலான வேலைகளைத் தேடி  அலைபவர்கள் நிறையப் பேர் இருப்பதால்   வேலை வழங்குபவர்களின் பேரம் பேசும் சக்தி அதிகமாக உள்ளது. இதனால், ஊதியத்தை குறைத்து கொடுத்து  அவர்களுக்கு தொடர்ந்து குறைவான ஊதியத்தை தர முடிகிறது. அப்படியே ஊதியம் உயர்ந்தாலும் அது மிகவும் குறைவானது.  எடுத்துக்காட்டாக, பணவீக்க விகிதம் அதிகமாக இருந்தபோதிலும் 2021-22 ல் விவசாயக் கூலி தொகை  3 சதவீதத்திற்கும் குறைவாகவே  அதிகரித்தது.  இந்தியாவில் ஒரு விவசாய குடும்பத்தின் சராசரி மாத வருமானம் 2019 இல் ரூ. 10,213  ஆக இருந்தது. பண வீக்க விகிதம் அதிகமாக இருந்தாலும் 2019ல்  ஒரு விவசாய குடும்பத்தின் சராசரி வருமானம் வெறும் ரூ .10213 மட்டுமே என கடந்த ஆண்டுக்கான  பொருளாதார அறிக்கை சொல்கிறது. (ஆதாரம்: ES 2021-22)

இந்த சம்பளம்  உணவு, தங்குமிடம், உடை, கல்வி, சுகாதாரம் மற்றும் ஓய்வுக்கு 4-5 உறுப்பினர்களுக்குப் போதுமானதாக  இருக்க வாய்ப்பே இல்லை.  வேலை செய்பவர்கள் மற்றும்  சுயதொழில் செய்பவர்களின்  ஊதியத்தை உயர்த்த கோரும்  சக்தி பலவீனமாக இருப்பதால், ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம் சிறிதளவு மட்டுமே உயர்கிறது. குறைந்த வளர்ச்சி அல்லது மந்த நிலையில்  தொழில் துறையில் தேக்கம் ஏற்படும் போது சராசரி குடும்பத்தின் நிலைமை மேலும் வருமானக் குறைவால்  சிதைந்து விடுகிறது. 

வேலைக்கு  ஆள் சேர்க்கும் அரசு ஆட்சேர்ப்பு அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்வதை  விரும்புகின்றன. சில நூறு கீழ்நிலை  காலியிடங்களுக்கு பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் உட்பட ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கின்றனர். இதனால் அவர்களை வேலைக்கு  நியமிக்கும் அதிகாரிகள் மகத்தான அதிகாரத்தையும்  விருப்பப்படி செயல்படும் வாய்ப்பையும்   பெறுகின்றனர்.  இதனால்  தரகர்கள்  பெருகி ஊழல் தலை தூக்குகிறது.

காலி இடங்களை விட வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால்  தனியார், பொது மற்றும் அரசாங்கத் துறைகளில் வேலைகளை தற்காலிகமாக நியமித்தல் மற்றும் தொகுப்பூதியம் என சம்பளம் வழங்கப் படுகிறது.    தொழிலாளர் நலச் சட்டங்கள் தூக்கி எறியப்படுகின்றன. தொழிற்சங்க இயக்கம் கணிசமாக பலவீனமடைந்து பேரம் பேசும் தகுதியை இழந்து வருகிறது.

குற்றச் செயல்களில் ஆர்வம் செலுத்தும் ஏஜென்சிகள் வேலையில்லாத திண்டாட்டம் தொடர்வதையே விரும்புகின்றன. இதனால் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத மதுபான வியாபாரம், சட்டவிரோத பந்தயம் மற்றும் சூதாட்டம், மனித கடத்தல்  போன்ற சட்ட விரோத செயல்களுக்கு  எளிதாக ஆட்கள் கிடைத்து விடுகின்றனர்.   இனி பணவீக்கம் அதாவது விலை உயர்வை  யார் விரும்புகிறார்கள்? என்று பார்க்கலாம்.

வரி  வசூல் செய்பவர்கள்  மற்றும்  வியாபாரிகள்

வரி  வசூல் செய்பவர்கள்  மற்றும்  வியாபாரிகள்  பணவீக்கத்தை விரும்புகிறார்கள். மாதந்தோறும், வரி வசூலிப்பாளர்கள் வரி வசூலில் அதிக உயர்வை கணக்கிட்டு  சொல்கின்றனர்.  இதன் மூலம் இவர்கள் தமது ஆட்சியாளர்களிடம் நல்ல பெயரை சம்பாதிக்கின்றனர். உதாரணமாக ஜிஎஸ்டி வசூலை சொல்லலாம். .  ஆகஸ்ட் 2022 ல், ஜிஎஸ்டி வசூல் ரூ. 1,43,612 கோடியாக இருந்தது. ஆகஸ்ட் 2021 இல்  இது ரூ. 1,12,020 கோடியாக இருந்தது.  ஆனால் கடந்த 12 மாதங்களில் சராசரி பணவீக்கத்திற்கு ஏற்ப, ஜிஎஸ்டி ரசீதுகளின் உண்மையான மதிப்பு ரூ.1 மட்டுமே. 33,559 கோடி. மட்டுமே. பொருட்களின் மதிப்பை அடிப்டையாகக் கொண்டு  சதவீதக் கணக்கில் விதிக்கப்படும் வரிகளிலும்,வரி விகிதம் அதிகமாக இல்லாமல் இருந்தாலும் வருவாய் உபரியாக அதிகரித்து விடுகிறது.

பட்ஜெட் தயாரிப்பாளர்களும் விலைவாசி உயர்வை விரும்புகிறார்கள்.  பட்ஜெட் ஆவணங்களில் உள்ள எண்கள் தற்போதைய  நடப்பு விலையில் உள்ளன.  . எனவே, முந்தைய ஆண்டில் ஒதுக்கப்பட்டதை விட, நடப்பு ஆண்டில் தான் அதிகப் பணத்தை ஒதுக்கியிருப்பதாக பட்ஜெட் தயாரிப்பாளர் கூறலாம். ஆனால் சிலர் தான் விலைவாசி உயர்வு இதை ஒப்பிட்டு தொகை  தொகை அதிகமில்லை  என்பதை புரிந்து கொள்ள  முடியும். சில குடிமக்கள். எடுத்துக்காட்டாக, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப  2022-23 பட்ஜெட்டில் பாதுகாப்பு, உரங்கள், உணவு, விவசாயம், ஆற்றல், சுகாதாரம், ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற மேம்பாடு ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட குறைவாக உள்ளது.

அரசில் கடன் திரட்டும் மேலாளர்களும்  பணவீக்கத்தை விரும்புகிறார்கள். தற்போதைய விலையில் கடன் வாங்கப்பட்டு திருப்பிச் செலுத்தப்படுவதால், பணவீக்க விகிதம் கடனின் மதிப்பைக் குறைக்கிறது. கடன் வாங்கியவர் உண்மையில் அவர் வாங்கியதை விட குறைவாக தான்  திருப்பிச் செலுத்துகிறார்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் என்னவோ விலைவாசி உயர்வை கவலைப்பட வேண்டிய விஷயம் இல்லை . இதை முன்னுரிமை அம்சமாக தான் கருதவில்லை   என்று  ஒன்றிய நிதியமைச்சர் குறிப்பிட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

விற்பனையாளர்களும் விலைவாசி உயர்வை  விரும்புகிறார்கள். குறைந்தபட்ச சில்லறை விலையையையும் உயர்த்தி விடுகின்றனர். மூலப்பொருள் தயாரிப்பு செலவுகள் குறைந்த அளவு உயர்ந்திருந்தாலும்  MRP கணிசமாக  உயர்ந்து  விடுகிறது. அதிகரித்துள்ளது.  குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விஷயத்தில் இது அதிகமாக இருக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக  சமீபத்தில் இந்தியா முழுவதும் அரசு நடத்தும் பால் பண்ணைகள் மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் மூலம் பால் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது நடந்தது.

ஏற்றுமதியாளர்களும்  பணவீக்கத்தை விரும்புகிறார்கள். ஏற்றுமதி மதிப்பின் ஒவ்வொரு டாலருக்கும், ஏற்றுமதியாளர் அதிக ரூபாய் சம்பாதிப்பார். இறக்குமதியையே அதிகம் சார்ந்திருக்கும் தொழில்களுக்கு இந்த அளவு வருவாய் உயராது என்பது உண்மை.

வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் கூட  விலை ஏற்றத்தையே விரும்புகின்றனர். இதைக் காரணமாக வைத்தே வட்டியை கூட்டலாம். அதே நேரத்த்தில் விலைவாசி உயர்வுக்கே ஏற்ப   பணச் செலவு அதற்கேற்ப உயராவிட்டாலும், வட்டி விகிதத்தை உயர்த்த இது ஒரு வாய்ப்பாக இருக்கிறது.

துறையினரும் விலைவாசி ஏற்றத்தையே விரும்புகின்றனர்.  சந்தையில் இரண்டே இரண்டு நிறுவனங்களை இருந்தால் அவர்கள் வைத்தது தான் விலை. சில பொருட்களுக்கு எவ்வளவு விலை அதிகரித்தாலும் அவற்றுக்கு மதிப்பு குறையாது.  சேவைகளுக்கும் அதிக  வரி விதிக்கலாம். உதாரணமாக, நீங்கள் நாளை டெல்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் செல்ல வேண்டும் என்றால் , பயணத்தின் வகுப்பைப் பொறுத்து ரூ. 50,000 வரை செலவழிப்பதைத் தவிர வேறு வழியில்லை. சில முக்கியமான நாட்களில் கட்டணங்களை நினைத்தபடி உபேர், ஓலா போன்ற தனியார் நிறுவனங்களும், ரயில்வே துறையும் பல்வேறு யுக்திகளை கையாண்டு கட்டணத்தை உயர்த்தி விடுகின்றன. அதிக வருவாயும் ஈட்டுகின்றன.  நான் சொல்வதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால்  2021-22க்கான தனியார் நிறுவனங்களின் லாபம்  பற்றிய காலாண்டு அறிக்கையை படித்துப் பாருங்கள். 

ஒப்பந்தக்காரர்களும் விலைவாசி எர்ரத்தையே விரும்புகின்றனர்.   பழைய மதிப்பீடுகள் திருத்தப்பட்டு மூலப் பொருட்களுக்கான விலையை உயர்த்தி கணிசமாக லாபத்தை உயர்த்திக் கொள்ள முடியும். 

அனைத்து அரசியல் கட்சிகளும்

பத்திரிக்கைகளின் தலையங்க எழுத்தாளர்கள்  கூட  கூட வேலையின்மை மற்றும் பணவீக்கத்தை விரும்புகிறார்கள். ஒரு தலையங்க எழுத்தாளர் ஒரு புதிய தலையங்கத்துக்கு புதிய பிரச்னையை தேடி அலையாமல்  அவர் வேலையின்மை அல்லது பணவீக்கம் பற்றிய பழைய தலையங்கத்தை எடுத்து அவற்றை சீரமைத்து புதிய தலையங்கத்தை எழுதிக் கொள்ளலாம். தலையங்கங்களை யாரும் படிக்காததால்  இது குறித்து யாருக்கும் தெரிய அதிக வாய்ப்பு இல்லை.

இறுதியாக, ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் கூட வேலையின்மை மற்றும் பணவீக்கத்தை விரும்புகின்றன. எதிர்க்கட்சிகளின் கைகளில், ஆட்சியாளர்களை கண்டிக்க இவை நல்ல ஆயுதங்களாக இருக்கின்றன.  “மோடி ஹை, டூ மெஹங்காய் ஹை” மற்றும் “மோடி ஹை, பெரோஸ்கர் ஹை” என்று கோஷமிட இவை பயன்படும். அதாவது மோடி ஒழிக என்றோ வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வேண்டும் என்றோ கோஷமிட்ட இது வசதியாக இருக்கும். ஆளும் கட்சியும் உங்களது ஆட்சியை விட எங்கள் ஆட்சியில் விலைவாசி உயர்ந்த வேகமும் வேலையில்லா திண்டாட்டமும் குறைவு என்று பதிலுக்கு வாதாட முடியும்.

இப்படியே போனால் ஒவ்வொருவருமே வேலையில்லா திண்டாட்டத்தையும் விலைவாசி உயர்வையும் விரும்பி ரசிக்கும்  நிலை கூட ஒருநாள் வரலாம்.

தமிழில் : த. வளவன்


source https://tamil.indianexpress.com/opinion/they-love-unemployment-and-inflation-p-chidambaram-writes-509999/