வெள்ளி, 4 மார்ச், 2016

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி: 17 தொகுதிகளில் அறிமுகம்


வரவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி 17 பேரவைத் தொகுதிகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, அவற்றை சரிபார்க்கும் பணிகள் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்களிலும் நடைபெற்று வருகின்றன.
இத்தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையில் ரசீதுடன் கூடிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் 17 தொகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.
அண்ணாநகர், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் வடக்கு, ஈரோடு மேற்கு, திருப்பூர் வடக்கு, கோவை வடக்கு, திண்டுக்கல், திருச்சி மேற்கு, கடலூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை கிழக்கு, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பேரவைத் தொகுதிகளிலும் இந்த வசதி பயன்படுத்தப்படும்.
இயந்திரத்தில் வேட்பாளர் படம்
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், வேட்பாளர்களின் பெயர்களுடன் அவர்களது படமும் வாக்குப் பதிவு இயந்திரத்தில் இடம்பெற்றன.
vvpt
அதேபோல, வரவிருக்கும் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் வேட்பாளர்கள் பெயர் படத்துடன் இடம் பெறும். இதன் மூலம் ஒரே பெயரில் இரண்டு மூன்று பேர் போட்டியிட்டாலும், வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்படாது.

Related Posts: