தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்தன.
செய்யக் கூடாதது என்ன: சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் சில முக்கிய விஷயங்களை மாநில அரசு செய்யக் கூடாது.
நிதியுதவி தொடர்பான எந்தவொரு அறிவிப்புகளையும் மாநில அரசு வெளியிட முடியாது. அரசு சார்பில் வாக்குறுதிகளோ, புதிய திட்டங்களோ, புதிய திட்டங்களுக்கான நிதிகள் ஒதுக்கீடோ செய்யக் கூடாது.