குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வரும்போது ஒரு மலை வாழைப்பழம் கொடுத்தால், உடனே சரியாகும்.
கர்ப்பிணிகளுக்கு ஆறு, ஏழு மாதங்களில் வரும் மலச்சிக்கலுக்கும் இது சிறந்த தீர்வு.
பிரசவத்துக்குப் பின், தாய்ப்பால் சுரப்பதற்கு உண்டான சத்துக்களை அளிக்கிறது.
நீர்ச் சத்து இல்லாதவர்கள், தொடர்ந்து சிறுநீர் கழிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு இந்தப் பழத்தைக் கொடுப்பதன் மூலம், அவர்கள் உடம்பில் உள்ள நீர்ச் சத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
சர்க்கரைச் சத்து இதில் குறைவு என்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கும் தாராளமாகக் கொடுக்கலாம்.
மலைப்பழத்துடன் கற்கண்டு, தேன் சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தால், மந்தத்தைப் போக்கிப் பசியைத் தூண்டும்.
ரத்தசோகையைப் போக்கி, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.