சூரியனை விட அளவில் 3 கோடி மடங்கு பெரிய 9 நட்சத்திரங்களை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.
இந்த 9 நட்சத்திரங்களையும் மொத்தமாக சேர்த்தால் அவை சுூரியனை விட 3 கோடி மடங்கு பிரகாசத்தைத் தரும்.
நமது பால்வழி மண்டலத்திலேயே இவையும் உள்ளன. இந்த நட்சத்திரக் கூட்டமானது புூமியிலிருந்து 1 லட்சத்து 70 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நட்சத்திரக் கூட்டத்திலேயே பெரிதானது இதுவாகும்.
பெரிய நட்சத்திரங்கள் எப்படி உருவாகின்றன என்ற ஆய்வுக்கு இந்தக் கண்டுபிடிப்பு பெரும் உதவியாக இருக்கும் வானியலாளரக்ள குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஷெப்பீல்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் போல் கிரவுதர் கூறுகையில், “கடந்த 2010ஆம் ஆண்டு ஆர்136 நட்சத்திரக் கூட்டத்தில் நான்கு புதிய நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை சுூரியனை விட 150 மடங்கு அதிக எடை கொண்டவையாகும். தற்போது இதே நட்சத்திரக் கூட்டத்திற்குள் மேலும் 5 பெரிய நட்சத்திரங்கள் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது” என்றார்.