திங்கள், 21 மார்ச், 2016

சமையல் எண்ணெய்யில எது நல்லது, கெட்டது-னு தெரி

நீங்க வீட்டுல யூஸ் பண்ற சமையல் எண்ணெய்யில எது நல்லது, கெட்டது-னு தெரி

15-1455514608-5thebestcookingoilsforyourhealthநாம் அனைவரும் ஒரே விதமான எண்ணெய்யை சமைப்பது இல்லை. ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்ற, விருப்பமான எண்ணெய்யை தான் பயன்படுத்துகிறோம். இன்னும் சிலர் அவர்களது பொருளாதாரத்திற்குக் எது சரிப்பட்டு வருகிறதோ அந்த எண்ணெய்யை தான் பயன்படுத்துகிறார்கள்.
 
தொப்பையை குறைக்க உதவும் இந்திய மாற்று உணவுகள்!!! சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயில் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், இது உடல்நலத்தை சார்ந்தது. எந்த எண்ணெயில் என்ன சத்து இருக்கின்றது. எவ்வளவு கொழுப்பு, எந்த வகையான கொழுப்பு உள்ளது அதனால் நமது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்குமா? குறையுமா? என்பதை எல்லாம் யோசிக்க வேண்டும்.
 
கொழுப்பை கரைத்து, பசியை குறைக்க உதவும் உணவுகள்!! பெரும்பாலும் நாம் அறிந்தது எல்லாம் சன்ஃபிளவர், ஆலிவ், ஓரைசனால், தேங்காய் மற்றும் கடலெண்ணெய் போன்றவை தான். இந்த எண்ணெய்களில் எது சிறந்து என இனிக் காண்போம்..
 
சன்ஃபிளவர் ஆயில் பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தும் எண்ணெய் இந்த சன்ஃபிளவர் ஆயில் தான். இது சூரியகாந்தி பூவின் விதைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
 
இதில் அதிகளவிலான வைட்டமின் ஈ சத்து இருக்கிறது. இது மோனோசாச்சுரெட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரெட்டட் கொழுப்பு அமிலங்களின் கலவையாக இருக்கிறது.
 
சன்ஃபிளவர் ஆயில் சிப்ஸ், சமோசா போன்ற உணவை வறுக்கவும், காய்கறிகள் சமைக்கவும் இது சிறந்தது. நீரிழிவு நோயாளிகள் சூரியகாந்தி எண்ணெய்யை கவனமாக பயன்படுத்து வேண்டும். ஏனெனில், இது சர்க்கரை அளவை அதிகபடுத்தும் தன்மை உடையது.
 
தேங்காய் எண்ணெய் இது முழுமையான சாச்சுரெட்டட் கொழுப்பு கொண்டுள்ளது ஆகும். தேங்காய் எண்ணெய்யை கொண்டே எப்போதும் சமைப்பது இரத்த கொலஸ்ட்ரால் அதிகரிக்க செய்கிறது. தேங்காய் எண்ணெய் எல்.டி.எல் மற்றும் எச்.டி.எல் என இருவகையான கொழுப்பையும் கொண்டுள்ளது.
 
நிலக்கடலை எண்ணெய் நிலக்கடலை அல்லது வேர்கடலை எண்ணெய். இதில் மோனோசாச்சுரெட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரெட்டட் கொழுப்பு இரண்டும் இருக்கிறது. மேலும் இதில் தீமை விளைவிக்கும் தீய சாச்சுரெட்டட் கொழுப்பு மிகவும் குறைவு. இந்த எண்ணெய் அனைத்து வகையான சமையலுக்கும் பயன்படுத்தலாம். அதிலும் ஆசிய கண்டத்து உணவுகளுக்கு இது சிறந்தது.
 
கடுகு எண்ணெய் (Mustard) இதில் எருசிக் ( Erucic) அமிலத்தின் அளவு 35 -48% இருப்பதால் சமையலுக்கு இது உகந்த எண்ணெய் இல்லை என கூறப்படுகிறது. நன்கு வறுத்து சமைக்கும் உணவுகளுக்கு மட்டும் இதை பயன்படுத்தலாம்.
 
கனோலா எண்ணெய் கனோலா எனும் தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் இது. சமீபக் காலமாக இந்திய சந்தையில் அதிகமாக விற்பனையாகி வருகிறது. ஆரோக்கியமான சமையல் எண்ணெய்களில் இதுவும் ஒன்றென கூறப்படுகிறது.
 
கனோலா எண்ணெய் இதில் ஒமேகா 3 மற்றும் மோனோசாச்சுரெட்டட் கொழுப்பு உள்ளது. வதக்குதல், பொரித்தல் மற்றும் பேக்கிங் போன்ற உணவு வகைகள் சமைக்க இது சிறந்தது.
 
ஆலிவ் எண்ணெய் ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரெட்டட் கொழுப்புகள் உள்ளன. இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இதய நோய் பாதிப்புகள் மற்றும் மார்பக புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயத்தை தடுக்க இது உதவுகிறது.
 
ஆலிவ் எண்ணெய் மோனோசாச்சுரெட்டட் கொழுப்பு கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. இந்திய உணவுகள் சமைக்க இது சிறந்த எண்ணெய் என கூறப்படுகிறது.
 
எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயிலில் ஓரிரு வகைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் இந்த எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில். இதய நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இது சிறந்தது.
 
அரிசி தவிடு எண்ணெய் (Rice Bran) அரிசி தவிடின் வெளிபாகத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது இந்த எண்ணெய். தாவிர எண்ணெய்களில் இது ஓர் ஆரோக்கியமான எண்ணெய் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 
அரிசி தவிடு எண்ணெய் (Rice Bran) கெமிக்கல் முறையில் இதை ஓரைசனால் (Oryzanol) என கூறுகிறார்கள். இது உங்கள் கொலஸ்ட்ராலுக்கு நல்லது. மேலும் இதில் மோனோசாச்சுரெட்டட் கொழுப்பு மற்றும் கொஞ்சம் பாலிசாச்சுரெட்டட் கொழுப்பும் உள்ளன.
 
எள் எண்ணெய் எள் எண்ணெயில் இரண்டு வண்ணங்கள் உள்ளன. வெளிர் நிற எள் எண்ணெய் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பயன்படுத்த படுகிறது. கருநிற எள் எண்ணெய் வறுத்து சமைக்கும் ஆசிய வகை உணவுகளை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
 
எள் எண்ணெய் இந்த இரண்டு வகையிலுமே பாலிசாச்சுரெட்டட் கொழுப்பு உள்ளது. இந்த எண்ணெய்யை அதிக நேரம் சூடு செய்து உபயோகிக்க கூடாது. இதில் மெக்னீசியம், காப்பர், கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின் பி6 போன்ற சத்துக்கள் இருக்கின்றன.