திங்கள், 21 மார்ச், 2016

இரண்டு வால் நட்சத்திரங்கள் இன்றும் நாளையும் பூமிக்கு அருகால் பயணம்

அடுத்தடுத்து இரண்டு வால் நட்சத்திரங்கள் இன்றும் நாளையும் பூமிக்கு அருகால் பயணம்

இரு வால் நட்சத்திரங்கள் இன்றும் நாளையும் மிக நெருங்கிய தொலைவில் பூமிக்கு அருகால் செல்லவிருப்பதாக வானியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவை கடந்த 250 ஆண்டுகளில் பூமிக்கு மிக நெருங்கி வரும் வால் நட்சத்திரங்களாக அமையவுள்ளன.
இதில் 252P/LINEAR என்ற வால் நட்சத்திரம் இன்று திங்கட்கிழமை பூமியில் இருந்து 3.3 மில்லியன் மைல்கள் நெருங்கிய தூரத்தில் கடந்து செல்லும் என்று நாஸா வானியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 750 அடி அளவு கொண்ட இந்த வால் நட்சத்திரம் கடந்த 2000 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் ஒருசில மாதங்களுக்கு முன்னர் கண்டுடிக்கப்பட்ட P/2016 BA14 என்ற வால் நட்சத்திரம் அடுத்த தினமான நாளை செவ்வாய்க்கிழமை பூமிக்கு அருகால் பயணிக்கவுள்ளது. இது பூமியில் இருந்து 2.2 மில்லியன் மைல்கள் நெருங்கி பயணிக்கும் என்று வானியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவை கடந்த 250 ஆண்டுகளில் பூமிக்கு மிக நெருக்கமாக வால் நட்சத்திரங்கள் கடந்து செல்லும் நிகழ்வுகளாக அமைவுள்ளன. இதில் நாளை பூமியை நெருங்கிவரும் வால் நட்சத்திரம் இதுவரை பதிவான வரலாற்றில் பூமிக்கு மின நெருக்கமாக வரும் மூன்றாவது வால் நட்சத்திரமாகவும் அமையவுள்ளது. இதனை விடவும் 1770 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் வந்த வால் நட்சத்திரங்களே பூமிக்கு மிக நெருக்கமாக இருந்தது.
இந்த வால் நாட்சத்திரங்கள் ஒப்பீட்டளவில் சிறியதாக இருப்பதால் அவை பூமியை நெருங்கும்போதும் சக்திவாய்ந்த தொலைநோக்கிகளைக் கொண்டு மாத்திரமே பார்க்க முடியும் என்று நாஸா அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது.
coltkn-03-21-fr-10163019273_4075767_20032016_mss_cmyஎனினும் இந்த வால் நட்சத்திரங்களால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அது குறிப்பிட்டுள்ளது. 

Related Posts: