ஞாயிறு, 20 மார்ச், 2016

முஸ்லிம் சமுதாயத்திற்கு 30 சீட்டுகள்

முஸ்லிம் சமுதாயத்திற்கு 30 சீட்டுகள் என்றதும் பி.ஜெ.பி.யினரை விட வேகமாக சில முஸ்லிம்களே பதறுவது ஏன்.......?
******************************************************
தமிழகத்தில் நமது முஸ்லிம் சமுதாயம் கொண்டுள்ள 12 சதவிகித வாக்குகளின் அடிப்படையில் நமக்கு முறையாக கிடைக்க வேண்டிய அளவு 25 சதவிகிதமாகும். அதாவது 53 சீட்டுகள் கிடைக்க வேண்டும்.
ஆனால் நாம் பல இயக்கங்களாக, கட்சிகளாக பிரிந்து இருப்பதனால் இயல்பாகவே அதற்கான வாய்ப்பு மறுப்புக்குரியதாகிறது.
இவற்றையெல்லாம் கணக்கிட்டுதான் நமது உண்மையான உரிமையில் 50 விழுக்காட்டை நாமே இழந்து மீதியேனும் பெற முயற்சிக்கிறோம்.
நம்மைப் பொறுத்தவரை 5 விழுக்காடு மட்டுமே வாக்குகள் கொண்டுள்ள விஜயகாந்த் முதலமைச்சராகிடவே முயற்சிக்கும்பொழுது 12 விழுக்காடு வாக்குகளுடன் 102 இடங்களின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் சக்தியாக உள்ள நாம் atleast 30 இடங்கள் கேட்பது அவசியமாகும்.
ஐந்திற்கு மேல் கிடைக்காது...
மூன்றிற்கு மேல் தர மாட்டார்கள் என்றெல்லாம் ஜோஸியம் சொல்லிக் கொண்டிருக்கும் சகோதரர்களே....
முயன்று தோற்றால் தவறில்லையே....
முயற்சி வென்றால் லாபம்...
இல்லையெனில் பாடம்....
எனவே விளையாட்டுப் போட்டிகளின் பார்வையாளராக அமர்ந்து கொண்டு வென்றால் கரகோஷம்.....தோற்றால் வார்த்தை துஷ்பிரயோகம் என்னும் உயிர்ப்பற்ற நிலையிலிருந்து மாற்றம் பெற்று களமிறங்கி வலி தாங்கி வழி காணுவோம்.

Related Posts: