*************************************************
நமது சமுதாய கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றிற்கான மேம்பாட்டிற்கு, ஆட்சி அதிகாரங்களில் நமக்கான பங்கினை மீட்டெடுப்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை.
கருணாநிதியாலோ ஜெயலலிதாவாலோ அல்லது இன்னும் வேறு அரசியல்வாதிகளாலோ இவையெல்லாம் நடந்துவிடும் என நம்புமளவு நாம் அரசியல் அரிச்சுவடி அறியாதவர்களும் அல்ல.
இருப்பினும் இன்றைய சூழலில் மிகுந்த தாழ்நிலையில் உள்ள நாம் கொஞ்சமேனும் மேலேறி வர விரும்பியோ விரும்பாமலோ இவர்களுடன் இணைந்து நிற்பதைத் தவிர மாற்று வழிகள் புலப்படவில்லை.
எனவே எப்படியேனும் யாருக்கேனும் வாக்களித்தே ஆக வேண்டும் என்பது நியதியாவதால், நமது சமுதாயத்தினர் ஒட்டு மொத்தமாக திரண்டு நமது சமுதாய கட்சிகளுக்கு அதிக இடங்கள் வழங்கும் கட்சிக்கே நமது வாக்குகளனைத்தையும் வழங்கிட உறுதியேற்போம்.
அதன்மூலம் "முஸ்லிம்களுக்கு எவ்வளவு அதிகம் கொடுக்கின்றோமோ அவ்வளவு அதிகம் பெற்றுக் கொள்ளலாம்" என்னும் உண்மையை அரசியல் கட்சிகளுக்கு உரைக்கச் செய்து விட்டால், ஓடி வந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் உட்பட ஒவ்வொரு தேர்தலிலும் நாம் வலுப்பெற்று நமது சமுதாய ஏற்றத்தினை நிலை நிறுத்த இயலும்.
இன்ஷாஅல்லாஹ்.....!