செவ்வாய், 15 மார்ச், 2016

விக்ஸ் ஆக்‌ஷன் 500 மாத்திரைகளை இந்தியாவில் விற்க தடை


vicks_action_500காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் விக்ஸ் ஆக்‌ஷன் 500 மாத்திரைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளதையடுத்து, அதன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த மாத்திரையை தயாரிக்க வலி நிவாரணிகள் மற்றும் ஆண்டிபாடிக் உட்பட 344 மருந்துகள் பயன்படுத்தப்படுவதாகவும், ஆனால் இவற்றில் நோயை குணப்படுத்தக்கூடிய சக்தி இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பாராசிட்டாமல், பினைலெப்ரைன். காஃபைன் போன்றவற்றை பயன்படுத்தியே விக்ஸ் ஆக்‌ஷன் 500 மாத்திரை தயாரிக்கப்படுவதால் அதற்கு தடை செய்து மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து, விக்ஸ் ஆக்‌ஷன் 500 எக்ஸ்ட்ரா மருந்தின்  விற்பனையையும் தாயாரிப்பையும் உடனடியாக நிறுத்திக்கொள்வதாக பிரோக்டர் & கேம்பிள் ஹெல்த் கேர் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.