வியாழன், 10 மார்ச், 2016

வெல்ஃபேர் பார்ட்டி அதிரடி முடிவு...!




~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகள்கூட
இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாதபோது 
வெல்ஃபேர் பார்ட்டி அதிரடியாகத் தனது
முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தொண்டாமுத்தூர் (கோவை)- எஸ். என். சிக்கந்தர்
திருச்சி மேற்கு- ஜமால் முஹம்மது
கிருஷ்ணகிரி- சையத் நஸீர்
வாணியம்பாடி- இஸ்மாயீல்
விழும அரசியலைத் தன் இலட்சியமாய்க் கொண்டு
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேசிய அளவில்
தொடங்கப்பட்ட கட்சிதான் வெல்ஃபேர் பார்ட்டி.
கடந்த காலங்களில் பல மாநிலங்களிலும் சட்டமன்ற,
உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டுக் கணிசமான
வாக்குகளை வாங்கியதோடு, உள்ளாட்சித் தொகுதிகளிலும்
வெற்றிகளைக் குவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாக 16 தொகுதிகளுக்கு
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில்
முதன்முறையாகக் களம் இறங்குகிறது..
பாதை வெகுதொலைவு என்பது தெரியும்...
இருந்தாலும் ஏதேனும் ஒரு புள்ளியிலிருந்து
பயணத்தைத் தொடங்கத்தானே வேண்டும்..
இதோ, தொடங்கிவிட்டது பயணம்..!
-சிராஜுல்ஹஸன்

Related Posts: