குஜராத்தின் காக்ரபார் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலை இயந்திரக் கோளாறு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
முதல் அணுஉலையில் உள்ள குளிர்விப்பானில் கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும் அணுஉலை மூடப்பட்டது. இதனால், அணுக் கதிர்வீச்சு ஏதும் பரவவில்லை என்றும், குளிர்விப்பானுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் காக்ரபார் அணுமின்நிலைய இயக்குநர் எல்.கே.ஜெயின் தெரிவித்தார்.
மேலும், இதனால் அணுமின் நிலைய ஊழியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.