ஞாயிறு, 20 மார்ச், 2016

கயிறு தொழில் மேம்பாட்டிற்கான கயிறு தொழில் முனைவோர் திட்டம்


கயிறு தொழில் அதிக தொழிலாளர்களை கொண்டதும் ஏற்றுமதி செய்யத்தக்கதும் , பாரம்பரியமிக்கதுமான விவசாயம் சார்ந்த குடிசைத் தொழிலாகும். தேங்காய் நார் சார்ந்த தொழிலின் மூலமாக கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்று வருகிறது. கயிறு தொழிலில் கேரளா மாநிலத்திற்கு அடுத்தப்படியாக தமிழகம் உள்ளது. ஆனாலும் பழுப்பு நிற நார் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதன் இடத்தில் உள்ளது.
காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) :
மத்திய அரசின் கயிறு வாரியம் (COIR BOARD) கயிறு தொழிலின் மேம்பாட்டிற்கு, ‘காயர் உத்யமி யோஜனா’ (COIR UDYAMI YOJANA ) என்ற கயிறு தொழில் முனைவோர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது .
நோக்கம் (Objective) :
கிராமப்புற தொழில்முனைவோரை உருவாக்குதல்.
பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல்.
தேங்காய் மட்டை கொண்டு வருமானத்தை பெருக்குதல்.
நவீனத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் தேங்காய் நார் தொழிலை நவீனப்படுத்துதல்.
தேங்காய் நார் சார்ந்த பொருட்களின் உற்பத்தி மற்றும் செயல்முறை தொழில்நுட்பத்தை புதுப்பித்தல் மூலம் உற்பத்தித் திறன், தரம் போன்றவற்றை மேம்படுத்துவது.
தேங்காய் மட்டையை பயன்படுத்தி தேங்காய் நார் மற்றும் தேங்காய் நார் பொருட்களின் உற்பத்தியை அதிகபடுத்துவது .
கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தென்னை நார் சார்ந்த தொழிலில் ஈர்ப்பது.
தொழிலின் திட்ட மதிப்பு (Levels Of Funding Under COIR UDYAMI YOJANA):
தொழிலுக்கான திட்ட மதிப்பு அதிகபட்சமாக ரூ.10 இலட்சத்திற்குள் இருந்தால் காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்தில் விண்ணபிக்கலாம். இந்த திட்டத்தில் நடைமுறை மூலதனத்தையும் (working capital) பெறலாம். இந்த நடைமுறை மூலதனம் (working capital) தொழிலுக்கான திட்ட மதிப்பில் 25%-க்குள் இருக்க வேண்டும்.
அரசு மூலதன மானியம்(Rate of Subsidy) :
காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்தில் அரசு மூலம் வழங்கப்படும் மானியம் (Subsidy) தொழிலின் திட்ட மதிப்பில் (Project Value) 40% சதவீதம் ஆகும். அதிகபட்சமாக ரூ.4 இலட்சம் வரை வழங்கப்படும்.
தொழில் முனைவோர் சொந்த முதலீடு (Beneficiary’s contribution (of Project Cost)):
தொழிலின் திட்ட மதிப்பீட்டில் (Project Value) குறைந்தபட்சம் 5% விழுக்காட்டை பயனாளிகள் தொழிலில் முதலீடு (Investment) செய்ய வேண்டும்.
வங்கிக் கடன் (Bank credit ):
வங்கி பயனாளிகளுக்கு அதிகபட்சமாக தொழிலின் திட்ட மதிப்பீட்டில் (Project Value) 55% சதவிதத்தை வங்கி கடனாக வழங்கும்.
Beneficiary’s contribution (of Project Cost) Bank credit Rate of Subsidy (of project cost)
5% 55% 40%
பயனாளிகளின் தகுதிகள் (Eligibility conditions of the Beneficiaries):
18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) விண்ணபிக்க எந்த வித வருமான வரம்பும் கிடையாது.
தென்னை நார் சம்மந்தமான பொருட்கள் உற்பத்தி செய்யபவர்களுக்கு மட்டும் காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டம் பொருந்தும்.
தனிநபர்கள், சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புடன் கூடிய நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்தின் கீழ் உதவி பெறலாம்.
விண்ணப்பிக்கவேண்டிய அரசு அலுவலகங்கள்
(Implementing Agencies):
காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற கயிறு வாரியம் (Coir Board) மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்களில் (Regional Offices) விண்ணபிக்கலாம்.
கடனுதவி அளிக்கும் நிறுவனங்கள் (Loan Granting Institution):
காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்தில் தேர்ந்தேடுக்கப்படுபவர்கள் வங்கிகள் (Banks) மூலம் கடனுதவி பெற பரிந்துரைக்கப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு :
Coir Board Regional Office,
Door No.103, Vallalar Street,
Venkatesha Colony,
Pollachi – 642001.
Tel/Fax : 04259-222450
http://coirboard.gov.in/
காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்திற்கான விண்ணப்பங்களை இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.