வெள்ளி, 11 மார்ச், 2016

மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு கொலை மிரட்டல்


sitaram_yetsuriமார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து டெல்லியில் உள்ள சிபிஎம் தலைமையகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, 

ஜவர்ஹலால் நேரு பல்கலைகழக மாணவர் போராட்டத்திற்கு யெச்சூரி ஆதரவு அளித்துள்ளதை எதிர்த்து அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சிபிஎம் அலுவலகத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர் யெச்சூரி செய்வது மிகவும் தவறான செயல் என்றும், அவர் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. 

இரவு 10.30 மணி முதல் 1மணி வரை, மூன்று தொலைபேசி அழைப்புகள் வந்தாக சிபிஎம் அலுவலக பணியாளர் தெரிவித்துள்ளார். மேலும் தொலைப்பேசியில் மிரட்டல் விடுத்தவர், தான் பல்வீர் சேனா அமைப்ப சேர்ந்தவர் என்று கூறியதாகவும் பணியாளர் தெரிவித்துள்ளார். 

மிரட்டல் தொடர்பாக, மந்திர் மார்க் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிபிஎம் அலுவலகத்திற்கு வந்த தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Posts: