பிஜேபி அமைச்சர் உள்பட கொலை வெறியர்கள் கூச்சல்!
ஆக்ரா, மார்ச் 1_ இஸ்லாமி யர்களே ஓடிப்போக தயா ராக இருங்கள் அல்லது விரட்டியடிக்கப்படுவீர் கள், நான் மத்தியஅமைச்சர் என்பதற்காக எனது கைகள் கட்டப்படவில்லை, நான் கட்டளையிட்டால் நடப்பது என்னவென்று அனைவருக்கும் தெரியும், நானே களம் இறங்க தயங் கமாட்டேன் என்று ஆக்ரா நாடாளுமன்ற உறுப்பின ரும், மனிதவளத்துறை இணை அமைச்சருமான சிவசங்கர் கட்டாரியா தெரிவித்தார்.
ஆக்ரா நகரில் விஷ்வ இந்துபரிஷத் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மத்திய மனித வளத்துறை இணையமைச் சர் சிவசங்கர் கட்டாரியா பேசியதாவது:
“இங்குள்ள இஸ்லாமி யர்கள் அரக்கர்கள், இவர் களுக்கும், இந்துவாகிய நமக்கும் போர் தயாராகி விட்டது, நான் அமைச்சர் ஆகவே எனக்கு என்று ஒரு எல்லை உண்டு என நினைக்க வேண்டாம், இந் துக்களுக்கு ஆபத்து என் றால் நான் எனது பதவி யைத் தூக்கி எறிந்து விட்டு வருவேன், எனது கைகள் கட்டப்படவில்லை,
எனது கூட்டத்திற்கு தடை விதித் துள்ள மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன், மீண்டும் நான் செவ்வாய், புதன், வியாழன் கிழமை களில் இதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்து வேன், முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று மிரட் டிய அமைச்சர் அடுத்த ஆண்டு தேர்தலில் இந்துக் கள் அனைவரும் இணைந்து பாஜகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும், இதன் மூலம் இஸ்லாமியர்களே இல்லாத மாநிலமாக, இந்து தேசமாக மலரச்செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும் என்று பேசினார்.
ஆக்ரா கிழக்கு தொகுதி சட்டமன்றஉறுப்பினர் ஜகன்பிரசாத் பேசும் போது:
இந்துக்கள் இனி துப் பாக்கி, கத்தி மற்றும் வாள் போன்றவற்றை எடுக்க வேண்டும், வரும் நாட் களில் நாம் முக்கியமான ஒரு திட்டத்தை நிறை வேற்ற உள்ளோம், நமது எதிரிகளை அழிக்க உயிர்த் தியாகம் செய்யும் நேரம் நெருங்கிவிட்டது, மத்திய அமைச்சர் நமக்கு உதவி யாக இருக்கிறார், எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் டில்லியில் இருந்து கொண்டு நம்மைக் காப்பாற்றிவிடு வார் என்றார்.
கூட்டத்தின் முடிவில் மாநில விஷ்வ இந்துபரிஷத் தலைவர் அசோக் லாவணியா பேசும் போது,
முஸ்லீம்களின் தலை களை வெட்டி ஊர்வலம் செல்ல வேண்டும், இன் னும் 13 நாட்களில் இங் குள்ள இஸ்லாமியர்கள் நிலை மாறியிருக்கும், அவர் களுக்கு மரணத்தின் தூது வன் காத்திருக்கிறார், என்று கூறினார். இவர் சிறுபான் மையினர்மீது தாக்குதல் மற்றும் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசி யது தொடர்பாக பலமுறை சிறை சென்று வந்தவர் ஆவார்.
முன்னதாக ஆக்ரா நகரில் எந்த இடத்திலும் பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது என்று காவல் துறை உத்தரவிட்டிருந்தது, மேலும் இவர்களது பொதுக்கூட்டத்திற்கும் தடைவிதித்திருந்தது, ஆனால் தடையை மீறி இந்தப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
சொத்து தகராறு கார ணமாக சில நாட்களுக்கு முன்பு விஷ்வ இந்துபரிஷ்த் உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இவரதுகொலையை வைத்து வன்முறையைத் தூண்டும் வகையில் மத்திய அமைச்சர், மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர் பேசியது உத்தரப்பிரதேசத் தில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.