விமான டிக்கெட் கிடைக்கவில்லையா? கவலையை விடுங்க தனி விமானத்திலேயே பறக்கலாம்
இனி அவசரமாக வெளியூர் செல்ல நேரும்போது விமான பயணச் சீட்டு கிடைக்காமல் போனால், கவலைப்படாதீர்கள், நீங்களும் விஐபி போல தனி விமானத்தில் குறைவான செலவில் பறக்கலாம்மிகவும் பணம் படைத்தவர்களால் மட்டுமே தனி விமானத்தில் பயணம் செய்யமுடியும், என்ற நிலையை உடைத்து சாமானியர்களுக்கும் அந்த அனுபவம் கிடைக்கும் வகையில் புதிய முயற்சியாக தொடங்கப்பட்டுள்ளது JetSetGo என்ற மொபைல் ஆப். அதன் வழியாக தனி விமானத்தின் இருக்கைகளை பதிவு செய்துகொள்ளலாம்.
தற்சமயம், தனி விமான சேவைகள், சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் பெங்களூரு நகரங்களில் இருந்து கிடைக்கப்பெறுகிறதுஇதுகுறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிந்த்து கொண்ட JetSetGo-வின் தலைமை செயல் அதிகாரி கணிகா தெக்ரிவால், இந்த முயற்சி இந்தியாவில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டது என்றும், 7 இருக்கைகள் கொண்ட தனி விமானத்தினை 50,000 ரூபாய் என்ற விலையிலிருந்து மொத்தமாக கூட பதிவு செய்யலாம், மேலும் சென்னையிலிருந்து தென் தமிழக நகரங்களுக்கு தனி விமான சேவைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
சில தனியார் நிறுவனங்களிடமிருந்து, ஒப்பந்தம் மூலம் பெறப்பட்டுள்ள அவர்களது தனி விமானங்களின் மூலம் அந்நிறுவனங்களுக்கும், நல்ல வருவாய் கிடைக்கிறது என்றும் தனி விமான பயணம் 8,000 ரூபாய் முதல் 10,000 என்ற குறைந்த விலையில் கிடைப்பதால் பொது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் கணிகா தெரிவித்தார்.