ஞாயிறு, 13 மார்ச், 2016

கல்வி என்னும் ஆயுதத்தை கையிலெடுத்தால் இந்திய

முஸ்லிம்களாகிய நாம் கல்வியை இழந்தோம்! வாழ்வை தொலைத்தோம்!
அரபு நாடுகளுக்கு டிகிரி படிக்காமல் வருவோம்.இங்கே பலுதியா வேலை (கார்ப்பரேசன்-கழிவகற்றுதல்) என ஊரில் பெருமையாக சொல்வோம்.இந்தியாவில்தான் ஒடுக்கப்பட்ட சமூகமாயிற்றே முஸ்லிம் நாடுகளிலாவது நல்லதொரு நிலையில் உள்ளோமா?இல்லை.படித்தால் நல்லதொரு வேலை வாய்ப்பை வழங்க அரபிகள் தயார்!நாம் இதற்கு தயாரா?
உயர்ஜாதி குப்தா,சேஷாத்ரி,அத்வானி,சர்மா,மோத்வானி இன்னும் எவ்வளவோ வகுப்பினர் இங்கு கோலோச்ச நாம் மட்டும் மிக பின்தங்கிய பரிதாப நிலை!இங்குள்ள மீடியாக்களில் கூட சிறிதளவு நம் பங்களிப்பு கிடையாது. ஆனால்,எளிதில் உணர்ச்சிவசப்படுவோம்.படிக்க மாட்டோம்
மோடியின் 100 நாள் ஆட்சி என்ற தலைப்பில் இங்கு பிரபலமான பத்திரிக்கையில் விவாதம் நடக்கும்.அதில் பாசிச மோடி அரசை ஆதரித்து பலர் கருத்து பதிவர்.நாம் பெரிய பொறுப்புகளில் இல்லாததால் ஊமையாகிப் போனோம்.
நாம் கல்வி என்னும் ஆயுதத்தை கையிலெடுத்தால் இந்திய சங்பரிவார்,யூத சியோனிஸ கூட்டணியின் முகத்தை அரபிகளிடம் தோலுரித்து காட்டலாம்.அதற்கு நமக்கு தேவை கல்வியும், விழிப்புணர்வும், ஒற்றுமையும்.நாம் செய்வோமா? .
நன்றி Rafeek Mohamed