அதிமுக கரூர் மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விஜயபாஸ்கர் விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பிற்கு வேறு ஒருவர் நியமிக்கப்படும் வரை அப்பொறுப்பை நாமக்கல் மாவட்ட கழகச் செயலாளரும், தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான பி.தங்கமணி கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.