செவ்வாய், 22 மார்ச், 2016

சுட்டெரிக்கும் சூரியன்:

தமிழகத்தில் சுட்டெரிக்கும் சூரியன்: சேலம், கரூரில் தலா 104 டிகிரி

தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. சேலம், கரூர் பரமத்தி உள்ளிட்ட 10 நகரங்களில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலைப் பதிவானது.
இவற்றில் சேலம்,heat கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை தொடங்கும் முன்னரே, பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் குறிப்பிகா அக்னி நட்சத்திர காலத்தின் போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், நிகழாண்டு மார்ச் மாதத்திலேயே வெப்பம் அதிகமாக இருக்கிறது.
சென்னை, மதுரை, பாளையங்கோட்டை, கரூர் பரமத்தி, கோவை, சேலம், தருமபுரி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், பிற்பகல் முதலே அனல் காற்றின் தாக்கமும், புழுக்கமும் காணப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக, பல நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது.
மாலை 5.30 மணி நிலவரப்படி சென்னை மீனம்பாக்கத்தில் 100.94 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இதேபோல நுங்கம்பாக்கத்தில் 96.98 டிகிரி பதிவானது.
அடுத்து வரும் நாள்களுக்கு, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வழக்கத்தை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை பதிவான வெயில் நிலவரம் (டிகிரி ஃபாரன்ஹீட்டில்)
சேலம், கரூர் பரமத்தி – 104
திருச்சி, மதுரை, வேலூர், திருப்பத்தூர் – 103
தருமபுரி, கோவை – 102
பாளையங்கோட்டை, சென்னை மீனம்பாக்கம் – 101
நுங்கம்பாக்கம் – 97
தொண்டி – 98