ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையால் வாடிப்பட்டி வாரச்சந்தையில், காளைகளை வேறுவழியின்றி விற்பனை செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இன்று நடைபெற்ற வாரச்சந்தையில், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் விற்பனைக்கு வரத்தொடங்கியுள்ளன. ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்டதால், குடும்ப சூழ்நிலை காரணமாக வேறு வழியின்றி ஜல்லிக்கட்டுக்காக காளைகளை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
முன்பெல்லாம், ஜல்லிக்கட்டு காளைகளை வாங்குவதற்கு நிலவிவந்த போட்டா போட்டியால், காளைகளை வாங்குவதே சிரமமாக இருந்ததாகக் கூறும் விவசாயிகள், உச்சநீதிமன்றம் விதித்த தடையால், ஜல்லிக்கட்டு காளைகளைக் கூட ஆர்வத்தோடு வாங்க ஆளில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
ஜல்லிக்கட்டுக்காக தங்களது கிராமத்தில் ஏராளமான காளைகள் வளர்க்கப்பட்டு வந்ததாகவும், உச்சநீதிமன்றம் விதித்த தடையால், தங்களது கிராமத்தில், தற்போது ஜல்லிக்கட்டு காளைகளே இல்லாத நிலை உருவாகிவிட்டதாகவும் விவசாயிகள் வேதனையுடன் கூறினர். ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்தால் மட்டுமே, காங்கேயம் உள்ளிட்ட காளை ரகங்களை காப்பாற்ற முடியும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.