செவ்வாய், 22 மார்ச், 2016

50 ஆண்டுகளுக்கு ஒருமுறை விளையும் மூங்கில் அரிசி !


செங்கம் அருகே மருத்துவத்திற்கு பயன்படும் மூங்கில் நெல்விளைச்சல் அதிகரித்திருப்பதால், அவற்றை அப்பகுதி பொதுமக்கள் சேகரிக்க தொடங்கியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான மூங்கில் காடு உள்ளது. சுமார் 10 கி.மீ தொலைவுள்ள இந்த மூங்கில் காட்டில் தற்போது மூங்கில் நெல்விளைச்சல் தொடங்கியுள்ளது. 

50 ஆண்டுகளுக்கு ஒருமுறை விளையும் மூங்கில் பயிர்கள் தற்போது விளைந்துள்ளதால்,  மேல்செங்கம், மேல்பள்ளிபட்டு, அரசங்கண்ணி, தண்டம்பட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மூங்கில் நெல்லை சேகரிக்க தொடங்கியுள்ளனர். 

சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாக செயல்படுவதால் பலர் வந்து வாங்கி செல்வதாகவும் கூறப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு 150 முதல் 250 ரூபாய் வரை கிடைப்பதால் மருத்துவ குணம் நிறைந்த மூங்கில் அரிசியை பொதுமக்கள் விற்பனை செய்தும் வருகின்றனர்.