ஞாயிறு, 20 மார்ச், 2016

முந்நூறு வருட கணித சமன்பாட்டுக்குத் தீர்வு

Willy
முந்நூறு வருடங்களாகத் தீர்வு காணப்படாமல் இருந்த பெர்மெட்டின் கடைசி சமன்பாட்டுக்குத் தீர்வு கண்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியரான சர் ஆண்ட்ரூ வைல்ஸுக்கு கணிதத்துக்கான உயரிய விருதாக அறியப்படும் ஏபல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16 ஆம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்த பெர்மெட் என்ற கணிதவியலாளர் தனது இறுதிக் காலத்தின்போது உருவாக்கிய சமன்பாடு பெர்மெட்டின் கடைசி சமன்பாடு என்று அழைக்கப்படுகிறது. கடந்த 1637 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த சம்ன்பாட்டுக்குத் தீர்வு காணமுடியாமல் கணிதவியலாளர்கள் விழிபிதுங்கி நின்றிருந்தனர்.
இந்த நிலையில், பெர்மெட்டின் சமன்பாட்டுக்கு தீர்வு கண்டுபிடித்து, அதற்காக விளக்கத்தையும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கணிதவியல் துறை பேராசிரியர் சர் ஆண்ட்ரூ வைல்லீஸ் கடந்த 1995-ல் வெளியிட்டார்.
இவரது கண்டுபிடிப்புக்கான அங்கீகாரம் தாமதமாகத் தற்போது கிடைத்துள்ளது. அவரது இந்த கண்டுபிடிப்புக்காக கணித உலகின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் நார்வே நாட்டின் ‘ஏபல்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.