நாங்கள் படும் அவளங்களை நீங்கள் பேச வேண்டும் !
சிறைப்பட்ட எங்கள் கோலம் நிலை மாற வேண்டும் !
உங்களோடும்,உறவோடும் நாங்கள் வாழ வேண்டும் !
இறைத்தந்த சோதனையில் நாம் வெல்ல வேண்டும் !

அன்றொரு நாள் சமூகம் படும் அவலத்தை கண்டோம் !
தாங்காத எங்கள் உள்ளம் நீதிதேடி தெருக்கோடி வந்தோம் !
விலை போனது எங்கள் வாழ்வு நீதி வென்று முன்னேறினோம் !
சூதும்,வாதும் கவ்வியதால் ஆயுள் முழுவதும் முடங்கினோம் !

அள்ளி வளர்த்த அன்னையும் மகனை பாராது மறைந்துவிட்டாள் !
வாழ வந்த மனைவியும் துணைவரை எண்ணி தேய்ந்துவிட்டாள் !
தோள் சுமந்த மழலையும் தந்தையை அழைத்து ஓய்ந்துவிட்டாள் !
தூண் இழந்த குடும்பமும் விடுதலையை வேண்டி ஓலமிட்டாள் !

சிறைக் காணும் எங்களுக்கு ஆயுள் கடந்து போனது !
சிறை செய்யும் கொடுமையினால் மனம் வெந்து நோகுது !
நோயும்,முதுமையும் இணைந்ததினால் மரணம் தொடர்ந்து நெருங்கிது !
மார்க்கம் தந்த உள்ளமையால் நீதியின் குரலுக்கு அழைக்குது !
- இஸ்மாயில்