வியாழன், 3 மார்ச், 2016

அத்திப்பழ மில்க் ஷேக்


1427262265மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு எனர்ஜி பானமாக, வீட்டில் உலர்ந்த அத்திப்பழம் இருந்தால், அதனைக் கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள்.
இதனால் அவர்களுக்கு எனர்ஜி கிடைப்பதோடு, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். மேலும் இந்த மில்க் ஷேக் அவர்கள் விரும்பி குடிக்குமாறு இருக்கும். சரி, இப்போது அந்த உலர்ந்த அத்திப்பழ மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
உலர்ந்த அத்திப்பழம் – 4
குளிர்ந்த பால் – 1 கப்
வென்னிலா ஐஸ்க்ரீம் – 1 ஸ்கூப்
தேன் – 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் உலர்ந்த அத்திப்பழத்தை சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை நீரில் இருந்து எடுத்து, நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் அத்திப்பழம், பால் மற்றும் தேன் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் அதில் வென்னிலா ஐஸ்க்ரீம் சேர்த்து, மீண்டும் ஒருமுறை அடித்து பரிமாறினால், அத்திப்பழ மில்க் ஷேக் ரெடி!!!

Related Posts: