அத்திப்பழம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பெரிதும் உதவுகிறது.
அத்திப்பழத்தைத் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அத்திப்பழத்தில் உள்ள சத்துக்கள்
கால்சியம்-200 மி.கி
அதிகளவு நார்ச்சத்து
புரதம் – 4 கிராம்
இரும்புசத்து – 4 மி.கி
தயாமின் – 0.10 மி.கி
விட்டமின் பி 12
கலோரி அளவு – 260 போன்றவை அடங்கியுள்ளன.
மருத்துவ பயன்கள்
அத்திப்பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கும்.
அத்திப்பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும், உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் இறுகி வெளியேறும்.
இவ்வாறு 10-20 நாள் சாப்பிட உள்மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும்.
அத்திப்பழம் சீரண சக்தியை தூண்டும். தினசரி சாப்பிட்டு வர ஆரோக்கியம் பெருகும். உடல் உஷ்ணத்தை தணிக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற உஷ்ண உபாதைகள் அகலும்.
உடலுக்கு குளிர்ச்சியூட்டக் கூடியது. பெண்களின் வெள்ளை படுதலையும் போக்கிடும்.
தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
இப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம், சிறுநீரில் ஏற்படக்கூடிய கால்சிய இழப்பைக் குறைக்க உதவுகிறது.
இதில் பொட்டாசியம் சத்து உள்ளதால் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.