சனி, 3 ஆகஸ்ட், 2019

மாம்பழத் தோலை வைத்து BioPlastic தயாரித்து அசத்திய 23 வயது இளைஞர்...! August 02, 2019

Image
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 23 வயது விஞ்ஞானி ஒருவர் மாம்பழத் தோலை வைத்து BioPlastic தயாரித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.
தற்போதைய காலத்தில், பிளாஸ்டிக்கின் பயன்பாடு மிகவும் அதிகமாகி விட்டது. இதனால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பை தடுக்கும் நோக்கில், பல இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், பிளாஸ்டிக்கின் அவசியத்தால், Bio Plastic எனப்படும் வகையான பிளாஸ்டிக்கை, பலவிதமான பொருட்களை வைத்து தயாரிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். அந்த நிலையில், தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த  டென்சிபில் மாண்டினோ என்ற விஞ்ஞானி, மாம்பழத் தோலை வைத்து Bio Plastic-ஐ தயாரித்துள்ளார்.
ஆராய்ச்சியாளர் ஒருவர், SeaWeed எனப்படும் ஒருவகையான தாவரத்தை வைத்து Bio Plastic தயாரித்த வீடியோவைப் பார்த்த மாண்டினோவிற்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிகமாக கிடைக்கும் மாம்பழத் தோலை வைத்து BIo Plastic தயாரிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாக தெரிவித்தார்.
மேலும், இந்த பிளாஸ்டிக்கால் எந்த உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்காது எனவும் எளிதில் மக்கக்கூடிய தன்மை கொண்டது எனவும் தெரிவித்தார். இவரின் இந்த புதிய முயற்சிக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

credit ns7.tv