செவ்வாய், 13 செப்டம்பர், 2016

பெங்களூரில் ஊரடங்கு உத்தரவு: பல பகுதிகளில் 144 தடை

காவிரி விவகாரத்தால் போராட்டம் வெடித்ததால் பெங்களூரு மாநகரின் 16 காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மட்டுமல்லாது பொதுசேவைகள் அனைத்தும் முடக்கப்படும். அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளிவர அனுமதி அளிக்கடமாட்டாது. காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் கொடி அணிவகுப்பு சீரான இடைவெளியில் நடத்தப்படும்.
அதேநேரம், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் வெளியில் வர அனுமதிக்கப்படுவர், ஆனால் 4 பேருக்கு மேல் கூடுவதற்கு அனுமதி கிடையாது. மேலும், வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி விவகாரத்தால் பெங்களூருவில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் 40-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்றும் 45-க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் தீக்கீரையாக்கப்பட்டன. போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

Related Posts: