காவல் துறையில் அளிக்கப்படும் புகாரின் மீது குற்ற விசாரணை முறைச்சட்ட பிரிவு 157(1) ன் கீழ் உரிய புலனாய்வு செய்ய வேண்டும், அவ்வாறு புலனாய்வு செய்ய கூடிய அளவு கொடுமையான குற்றமல்ல என்ற நிலையில் பிரிவு 157(1)(ஆ) ன் படி புலனாய்வு செய்ய போதிய காரணமில்லை என சொல்லி பிரிவு 157(2) கீழ் புகார் அளித்தவருக்கு தெரிவிக்க வேண்டும் என குற்ற விசாரணை முறைச்சட்டம் சொல்கின்றது.
ஆனால், கடந்த 15-08-2016 அன்று U/S 154 (3) Cr.P.C 154(3) மற்றும் 149-ன் கீழ் மாவட்ட கண்காணிப்பாளரிடம் அளிக்கப்பட்ட புகார்ஒன்று இன்னுமும் நிலுவையிலேயே உள்ளது.
சட்ட அறிவிப்பினை அளிக்கலாம் / நீதி மன்ற டைரக்க்ஷன் வாங்குவது போன்றவைகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு, இவ்வாறு கிடப்பில் போட்டு வைக்க என்ன காரணம் என கேட்கலாம் என முடிவு செய்து நாளை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலம் சென்று எஸ்.பி அவர்களிடமே கேட்டு விடலாம் என முடிவு செய்து விட்டேன். நாளை அங்கு சென்று என்ன தான் சொல்கின்றார்கள் என உடனுக்குடன் பதிவிடுகின்றேன். நாளை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து தகவல்களை பதிவிடுகின்றேன். பின் தொடரவும்.
R.SAIYAD BASHEER
Founder of ACF
Anti Corruption Foundation.
Founder of ACF
Anti Corruption Foundation.