ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

சிறிய முதலீட்டில் தொடங்கலாம் “ஹோம் மேட் சாக்லேட்” தொழில்

சிறிய முதலீட்டில் தொடங்கலாம் “ஹோம் மேட் சாக்லேட்” தொழில்
அதிக அளவில் முதலீடு தேவைப்படாத, மூலப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாத, அதே நேரத்தில் எதிர்காலத்தில் மிகச் சிறந்து விளங்கி, நல்ல வருமானத்தை தரக்கூடிய , இந்தத் தொழிலில் இருக்கும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் நேரடி அனுபவ பயிற்சி
பெற்றபிறகு, இத்தொழிலை நீங்கள் செய்ய ஆரம்பித்தால் நிச்சயம் ஜெயிக்கலாம்.
ஹோம் மேட் சாக்லேட் தேவையான முதலீடு :
குறைந்த பட்சம் 10,000
லாபம்:
15 முதல் 20 சதவீதம் வரை
சாதகமான அம்சம்கள் :
பெரிய அளவில் இடவசதியோ, முதலீடுகளோ தேவையில்லை.
ஒரு சில நாள் பயிற்சியே போதும்.
மூலப் பொருள் தருபவர்களே பயிற்சியும் தருகிறார்கள்.
மூலப் பொருட்கள் எளிதாகவும் தட்டுப்பாடின்றியும் கிடைக்கும்.
தரமாக செய்தால் ஒரு வருடம் வரை வைத்து விற்பனை செய்யலாம்.
பாதகம் :
24 மணிநேரமும் குளிர்சாதன வசதி வேண்டும் அதற்கு தடையில்லா மின்சாரம் தேவை.
சரியாக பேக்கிங் செய்யாவிட்டால் காற்று புகுந்து சாக்லேட் வீணாகிவிடும்.
முன்னணி சாக்லேட் நிறுவனங்களுடன் போட்டி போட்டு மார்க்கெட்டிங் செய்வது.
எந்த வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடியது என்பது இத்தொழிலில் உள்ள மிகப்பெரிய பாசிடிவ் அம்சம். வழக்கமான சாக்லேட்களை மட்டுமே தராமல் , புதுப்புது சுவைகளை எல்லோரையும் கவரும் வகையில் பேக்கிங் செய்து , வித்தியாசமான டிசைனில் சாக்லேட்களை செய்து விற்றால் வெற்றி நிச்சயம்.
கொஞ்சம் வித்தியாசமான வடிவமைப்புகளில் சாக்லேட்களை நாம் தயாரிக்க வேண்டும். சாக்லேட் தயாரிக்க தேவையான வித விதமான அச்சுகள் சந்தியிலேயே கிடைக்கின்றன. சக்கரை நோயாளிகளுக்கேற்ப சாக்லேட்கள் , ஹெல்த்கேர் சாக்லேட்கள் என வெளிநாடுகளில் சாக்லேட் சந்தைகள் வேகமாக மாறிவருகிறது. சந்தையில் பிராண்டட் சாக்லேட்கள் பல இருந்தாலும் வீட்டில் தயாராகும் சாக்லேட்களுக்கு தனி மவுசு இருக்கிறது. எனவே தைரியமாக இத்தொழிலில் இறங்கலாம்.
ஒரு கிலோ 300 முதல் 400 வரை விற்ப்பனையாகிறது.