தமிழகத்தில் பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் நாளை முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பள்ளிகள் இயங்குமா என்ற கேள்வி எழுந்தது.
இந்தநிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல செயல்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல அரசுப் பேருந்துகள் காவல்துறை பாதுகாப்புடன் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேரும், சென்னை மாநகரில் 15 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்த நாள் : September 15, 2016 - 06:47 PM