வியாழன், 15 செப்டம்பர், 2016

காவிரி பிரச்சனைக்காக தீக்குளிக்க நேற்றே முடிவெடுத்த விக்னேஷ்...




நாம் தமிழர் கட்சியின் பேரணியில் தீக்குளித்த விக்னேஷ், தன்னுடைய முடிவு குறித்து நேற்றிரவு ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 

“ நாளை நடைபெறும் பேரணியில் பல தற்கொலை(தற்கொடை) போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. ஊடகங்கள் தங்கள் டி.ஆர்.பி ரேட்டை உயர்த்திக் கொள்ள பேரணியை நேரலையாக ஒளிபரப்ப வேண்டுகிறேன். அப்போதாவது மானத் தமிழ் இனம் கொதித்து எழட்டும். மாணவர் போராட்டம் இம்மண்ணில் வெடிக்கட்டும் ” என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த பதிவை இன்று மதியம் வரை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், தற்போது அந்த பதிவை ஷேர் செய்து பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
source: news18

Related Posts: