சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது தலைமைக் காவலர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டார்.
பட்டினப்பாக்கம் பகுதியில், விநாயகர் சிலைகளை கரைக்கும் பணியின் போது சாதாரண உடையில் குற்றப்பிரிவு தலைமைக்காவலர் முத்துக்கிருஷ்ணன் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தியாகராய நகரை சேர்ந்த பிரபு, ராஜபாண்டி, கலைச்செல்வன் உள்ளிட்டோரிடம் சந்தேகத்தின் பேரில் அவர் விசாரணை நடத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, ராஜேஷ் என்பவர் விநாயகர் சிலையை முத்துக்கிருஷ்ணன் மீது வீசியுள்ளார். இதில் படுகாயமடைந்த காவலரை ஓடஓட விரட்டி இளைஞர்கள் தாக்கியுள்ளனர்.
இதனை அடுத்து பட்டினப்பாக்கம் போலீசார், காயமடைந்த முத்துக்கிருஷ்ணனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தச் சம்பவத்தின் போது காயமடைந்த பிரபு என்பவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பதிவு செய்த நாள் : September 11, 2016 - 08:51 PM
source: new gen media