உரிய அங்கீகாரம் இல்லாத புதிய வீட்டுமனைகள் பதிவு செய்யப்படாது என பத்திரப்பதிவுத் துறை தெரிவித்துள்ளது.
உரிய அங்கீகாரம் இல்லாத குடியிருப்புகளும், கட்டடங்களும் பதிவு செய்யப்படாது என அத்துறை கூறியுள்ளது. சென்னை மாநகரப் பகுதியில் சி.எம்.டி.ஏ அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகளும் மற்ற பகுதிகளில் டீ.டி.சி.பி அங்கீகாரம் பெற்ற மனைகளும் மட்டுமே பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையில்லா சான்றிதழ் இருந்தாலும் கூட பத்திரப்பதிவு செய்யப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்த நாள் : September 13, 2016 - 05:02 PM
மாற்றம் செய்த நாள் : September 13, 2016 -