வியாழன், 1 செப்டம்பர், 2016

மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் நேற்றைய சட்டமன்ற உரையின் தொடர்ச்சி..

மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் நேற்றைய சட்டமன்ற உரையின் தொடர்ச்சி..
வக்பு வாரியம் சார்பில், வேலைக்கு செல்லும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை பெருகியிருப்பதை கருத்தில் கொண்டு சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் முஸ்லிம் பெண்கள் விடுதி அமைக்கப்பட வேண்டும்.
வக்பு வாரிய சொத்துக்கள் முழுமையாக கண்டுடறியப்பட்டு, வாடகைக்கு விடப்பட்டுள்ள வக்பு சொத்துக்களின் வாடகையை உயர்த்தி வக்பு வாரியத்திற்கு வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும். வாரியத்தில் பணியாளர் பற்றாக்குறை இருப்பதால், போதுமான பணியாளர்களை நியமித்து வக்பு வாரியத்தை செம்மைப்படுத்த வேண்டும்.
வக்பு வாரியம் சார்பில், நாகூரில் முஸ்லிம் பெண்கள் கலைக் கல்லூரி ஒன்றை தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
வக்பு வாரியம் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க அரசு சார்பில் தீர்ப்பாயம் (Tribunal) அமைக்கப்பட வேண்டும்.
(இதற்கு பதில் அளித்த அமைச்சர் நிலோபர் தீர்ப்பாயம் அமைப்பது குறித்து அரசின் பரிசீலனையில் இருப்பதாக கூறினார்.)
உர்து மொழி, அது மெர்து மொழி,
இந்தியாவின் விருது மொழி என்றார் கவிக்கோ.அப்துர் ரஹ்மான்.
தமிழகத்தில் உர்து பேசும் மக்களின் உணர்வை மதிக்கும் வகையில் உர்து அகாடமி தொடங்கப்பட்டது. ஆனால் அது எதிர்ப்பார்த்த வகையில் செயல்ப்படவில்லை என்ற குறை உள்ளது.
அதைப்போக்கும் வகையில் உர்து அகாடமிக்கு தனி அலுவலகம் அமைத்து, அதில் உர்து மொழி அறிஞர்களை உறுப்பினர்களாக்கி அதை செயல்படும் அமைப்பாக மாற்ற வேண்டும்.
தற்போது அமலில் உள்ள முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டில், பயனாளிகளின் வரிசைப்பட்டியலில் முஸ்லிம்கள் 14 வது இடத்தில் உள்ளனர். ரோஸ்டர் (சுழற்சி) முறையும் இருக்கிறது.
இதனால் சில துறைகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. அதனை மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் ஆராய்ந்து; சரி செய்து; இடஒதுக்கீடு முழுமையாக கிடைக்கவும், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டு அளவை உயர்த்தி தரவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
வாய்ப்புக்கு நன்றி கூறி அமர்ந்த எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் பேச்சை அவையில் இருந்த அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் கவனமாக கேட்டனர்.
சிறுபான்மை சமுதாயத்தின் அதிமுக்கிய விசயங்களை கவனமான வார்த்தைகளில், ஆழமாக பேசினீர்கள் என்று அமைச்சர்களும் வாழ்த்து கூறினார்கள்.
தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்