செவ்வாய், 11 அக்டோபர், 2016

Quran

26:60காலையில் (ஃபிர்அவ்ன் கூட்டத்தினர்) அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
26:61. இரு கூட்டத்தினரும் நேருக்குநேர் பார்த்துக் கொண்ட போது "நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்" என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். 
26:62. "அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்" என்று அவர் கூறினார்.
26:63. "உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக" என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.
26:64. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம்.

26:65. மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம்.
26:66. பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.
26:67. இதில் தக்க சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை