வட கொரியாவின் அணு ஆயுத மிரட்டலால் வட கொரியா மற்றும் தென் கொரியாவில் வசித்து வரும அமெரிக்கர்கள் உடனடியாக நாடு திரும்ப அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.
வடகொரியாவின் அணுஆயுத ஏவுகணை சோதனை உலக நாடுகளை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், வடகொரியாவை தனிமைப்படுத்தும் மற்றும் அகற்றும் முயற்சியில் இருக்கும் அமெரிக்காவின் செயலை ஆஸ்திரேலியா பின்பற்றினால் அது கண்டனத்துகுரியது.
ஆஸ்திரேலியா செய்வது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம். இதை அவர்கள் தொடர்ந்தால் ஆஸ்திரேலியா மீது அணுகுண்டு வீசுவோம் என மிரட்டி உள்ளது.
இதன் காரணமாக வடகொரியாவை கட்டுக்குள் கொண்டு அமெரிக்கான தனது கடற்படையை வடகொரியாவை நோக்கி அனுப்பி உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வடகொரியா, எங்களிடம் உள்ள எவுகணையை வைத்து ஒரே அடியில் அமெரிக்க கப்பலை தகர்ப்போம் என வட கொரியா எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக நாடுகள் கவலைகளை தெரிவித்து உள்ளன.
அதைத்தொடர்ந்து வட கொரியா மற்றும் தென் கொரியாவில் இருக்கும் 230,000 அமெரிக்கர்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்ற அமெரிக்க ராணுவத்துக்கு டொனால்டு டிரம்ப் உத்தர விட்டுள்ளார்.