திங்கள், 14 டிசம்பர், 2020

2020-ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தின் சிறப்புகள்

 Solar Eclipse 2020 Date and Time in India Tamil News : இந்த ஆண்டின் கடைசி கிரகணம், டிசம்பர் 14 அன்று ஏற்படும். புதிய சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சென்று சூரியனை முற்றிலுமாகத் தடுக்கும்போது, வான நிகழ்வு ஏற்படும். முந்தைய சூரிய கிரகணம் ஜூன் 21 அன்று நிகழ்ந்தது. இதுவரை, 2020-ம் ஆண்டில் நான்கு பெனும்பிரல் சந்திர கிரகணங்களையும் பார்த்திருக்கிறோம்.

timeanddate.com-ன் படி, பகுதி கிரகணம் டிசம்பர் 14 அன்று 19:04 ஐ.எஸ்.டி அதாவது இரவு 7.04 மணிக்குத் தொடங்கும். அதே நேரத்தில் முழு கிரகணம் 20:02 ஐ.எஸ்.டி அதாவது 8.02 மணிக்குத் தொடங்கும். சூரிய கிரகணம் 21:43 (9.43) மணிக்கு உச்சம் அடைந்து டிசம்பர் 15 அன்று 12.23 மணிக்கு முடிவடையும்.

மற்ற ஆண்டு சூரிய கிரகணம் போல், மொத்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. சிலி மற்றும் அர்ஜென்டினாவில் அமைந்துள்ள டெமுகோ, வில்லாரிகா, சியரா கொலராடா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் இந்த வான நிகழ்வு தெரியும். மறுபுறம், பசிபிக் பெருங்கடல், அண்டார்டிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் தெற்கே ஒரு பகுதியில் சூரிய கிரகணத்தைக் காண முடியும்.

ஒரு வருடத்தில் அதிகபட்சம் ஐந்து சூரிய கிரகணங்கள் நிகழலாம். இருப்பினும், பெரும்பாலான ஆண்டுகளில் இரண்டு சூரிய கிரகணங்களை மட்டுமே நாம் காண்கிறோம். தேசிய ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் – நாசா படி, ஐந்து சூரிய கிரகணங்களின் எண்ணிக்கை மிகவும் அரிதானது. இது கடைசியாக 1935-ம் ஆண்டு நிகழ்ந்தது. அடுத்த முறை 2206-ல் நிகழலாம். மேலும், கடந்த 5,000 ஆண்டுகளில், ஒரு வருடத்தில் ஐந்து சூரிய கிரகணங்களை 25 முறை மட்டுமே பார்த்திருக்கிறோம்.

கடைசி சந்திர கிரகணம் நவம்பர் 30 அன்று நிகழ்ந்தது. இந்தியாவில் பெனும்பிரல் சந்திர கிரகணம் அடிவானத்திற்குக் கீழே நடந்ததால் தெரியவில்லை.

Related Posts:

  • ஊடகங்கள் மிரட்டப்பட்டுள்ளன. கருப்புப் பண சாமியார் பாபா ராம்தேவின் அடுத்த திருட்டுத்தனம் அம்பலம். இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட 'பதஞ்சலி பசு நெய்' என விளம்பரம் செய்து ஏமாற்ற… Read More
  • குடும்ப அட்டை குடும்ப அட்டைக்கு (ஃபேமிலி கார்டு) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை… என அனைத்துக்கும்… Read More
  • அடுத்த நாடகம் அரங்கேற்றம் அல்காயிதா'வின் பெயரால் அடுத்த நாடகம் அரங்கேற்றம்: ஒரே வருடத்தில் இந்திய ராணுவத்தையே நிர்மூலமாக்கும் அளவுக்கு பாகிஸ்தானில் பயிற்சி பெற்று… Read More
  • வக்கீல்கள் & மதிக்க மாட்டீகிறார்கள் சாதாரண 8,10 வது படித்த போலிஸ் கான்ஸ்டேபிள் ,ஏதாவது ஒரு ஆர்ட்ஸ் காலேஜ் ல டிகிரி முடித்த எஸ்.ஐ ,இன்ஸ்பெக்டர் கள் எல்லாம் ,.5 வருடம் சட்டம் படித்த நோபல… Read More
  • India in 1835 Minute by the Hon'ble T. B. Macaulay, dated the 2nd February 1835.         [1] As it seems to be the opinion of s… Read More