திங்கள், 14 டிசம்பர், 2020

திறக்கப்பட்ட மெரினா.. யாரெல்லாம் செல்லலாம்… விதிமுறைகள் விவரம்!

 கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் இறுதி முதல் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.இதனால் காலை, மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்வோர், உடற்பயிற்சி செய்வோர் மெரினா கடற்கரைக்கு செல்ல முடியாத நிலை உருவானது.

இதனை தொடர்ந்து படிப்படியாக தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு, டிசம்பர் 14ம் தேதி முதல் சென்னை மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளித்தது.

சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. 8 மாத இடைவெளிக்குப் பிறகு மெரினா கடற்கரை திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடற்கரையில் இன்று காலையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் உற்சாகத்துடன் உடற்பயிற்சி, நடைபயற்சி மேற்கொண்டனர்.

சென்னையில் உள்ள பூங்காக்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சுற்றுலா தலங்களுக்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், முககவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க உள்ளதாகவும் கூறி உள்ளனர்.

இதேபோல் மாமல்லபுரம் கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை பொதுமக்கள் பார்வையிடவும் இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 10 வயதுக்குட்பட்டவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.