புதன், 26 ஏப்ரல், 2017

ஹாங்காங்கில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக நீண்ட கடல் பாலம் April 26, 2017




ஹாங்காங்கில் கட்டப்பட்ட உலகின் மிக நீண்ட கடல் பாலம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் வாகனப்போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.    

சீனாவின், ஹாங்காங், மேகாவ், சுகாய் ஆகிய நகரங்களை இணைக்கும் விதத்தில் கடல் மீது 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. இதற்காக, கடல் நடுவில், 3 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், பாறைகள் மற்றும் மண்ணால் நிரப்பப்பட்டு, இரண்டு தீவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த தீவில், 59 இரும்புத் தூண்கள் நடப்பட்டு பாலம் கட்டப்பட்டது.  

சுமார் 6,720 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், வாகன சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பாலம் மக்களின் பயன்பாட்டிற்காக முழுமையாக திறந்துவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 50 கிலோ மீட்டர் நீள பாலத்தில், 6 கிலோ மீட்டர் தூரம், கடலுக்கு அடியில் சுரங்கம் அமைத்து உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.