சனி, 22 ஏப்ரல், 2017

இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள 60 மருந்துகள் தரமற்றவை: திடுக்கிடும் தகவல் April 22, 2017




நாட்டில் காய்ச்சல், ஜலதோஷம், வலி நிவாரணிகள் என சுமார் 60 மருந்துகள் தரமற்றதாக, மத்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பல்வேறு மருந்துகளின் தரம் குறித்து, கடந்த மாதம், மத்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில், நிர்ணயிக்கப்பட்ட தர அளவீடுகளுக்கு குறைவாக, பல மருந்துகளின் தரம் இருப்பது, ஆய்வின் முடிவுகளின்  தெரியவந்துள்ளது. 

இதனை அடுத்து, அவற்றை தரமற்ற மருந்துகளாக,  மத்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அறிவித்துள்ளது. காய்ச்சல், ஜலதோஷம், வலி நிவாரணி என உடல் உபாதைகளுக்காக மக்கள் எடுத்துக்கொள்ளும் பல மருந்துகள் இதில் அடங்கியுள்ளன. 

நோய் எதிர்ப்பு Amoxycillin, Ofloxacin,  Erythromycin Stearate  மாத்திரைகள், சளி, தும்மலுக்கான Cetirizine, D-cold total மாத்திரைகள், காய்ச்சலுக்கு எடுத்துக்கொள்ளப்படும் Combiflam, ஆஸ்துமா, வீசிங்கான Theo - Asthalin,  வலி நிவாரணி Ibuprofen, Gentamicin ஊசி மருந்து, மற்றும் இரும்பு சத்து மாத்திரைகள் தரமற்று இருப்பதாக, மத்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அறிவித்துள்ளது.

Related Posts: