ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

பள்ளி மாணவிகளின் உடைகளை அவிழ்த்து, மாதவிடாய் சோதனை நடத்திய ’வார்டன்’ April 02, 2017


​பள்ளி மாணவிகளின் உடைகளை அவிழ்த்து, மாதவிடாய் சோதனை நடத்திய ’வார்டன்’


உத்தர பிரதேசத்தில், பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் உள்ளதா என சோதனை செய்ய, 70 மாணவிகளின் ஆடைகளை, பள்ளி விடுதியின் ’வார்டனே’ அவிழ்த்து காண்பிக்க சொன்ன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முசாபர்நகரில் உள்ள கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலை பள்ளியின் விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி, படித்து வருகின்றனர்.  அந்த விடுதியில் வார்டனாக பணியாற்றி வரும் பெண், குளியறையில் ரத்தக்கறைகள் இருப்பதை பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் , விடுதியில் உள்ள பெண்கள் அனைவரையும் வரிசையில் நிற்க வைத்து, அவர்களின் உடைகளை அவிழ்க்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளார். பின்பு, அனைவரையும் நிர்வானமாக நிற்க வைத்து, ’யாருக்கேனும் மாதவிடாய் பிரச்சனை உள்ளதா’ என சோதனை செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள், போலீசாரை தொடர்புகொண்டு புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து, வார்டனை பணி இடைநீக்கம் செய்துள்ளது கல்லூரி நிர்வாகம் . இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவிகள்,” வார்டனின் இந்த அறுவருக்கத்தக்க செயலால், தங்களுக்கு மிகுந்த அவமானதையும், மனவுளைசளையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.மேலும், சம்பந்தப்பட்ட வார்டன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனார்.

சம்பவத்தை மறுத்து பேசிய விடுதி வார்டன், தான் அவ்வறு நடந்துகொள்ளவில்லை எனவும், மாணவிகளின் கண்டுப்புடன் நடந்துகொள்வதால், மாணவர்கள் தன் மீது பொய் குற்றச்சாட்டை கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்