சங்கரன்கோவில் அருகே தென்னை, எலுமிச்சை விவசாயம் கருகியதால் அதிர்ச்சியில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் தேசியம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சம்மனசு, தன்னுடைய நிலத்தில் தென்னை, எலுமிச்சை, பருத்தி ஆகியவற்றை பயிர் செய்து வந்துள்ளார். விவசாயத்திற்கு போதிய நீரின்றி பயிர்கள் கருகியதை கண்டு மனம் வருந்தியுள்ளார்.
நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் வயலுக்கு சென்ற அவர், கருகிய பயிர்களை கண்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் விவசாயி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.