தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்களை அமைதியான முறையில் போராட அனுமதியுங்கள் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, மார்க்கண்டேய கட்ஜூ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், வருங்காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம் என வேதனை தெரிவித்துள்ள கட்ஜூ, அதற்குக் காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா எனவும் மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 300 நாட்களில் தமிழகத்தில் 300 விவசாயிகள் மரணமடைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள மார்க்கண்டேய கட்ஜூ, போதிய நீரில்லாமல் விவசாயம் அழிந்துவருவதாக வேதனை தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டுமெனவும் கட்ஜூ வலியுறுத்தியுள்ளார்.