செவ்வாய், 25 ஏப்ரல், 2017

பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி! April 22, 2017

பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி!


சுமார் 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பான ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்தது.

வங்கக் கடலில் இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் டி.கே. ஷர்மா தெரிவித்துள்ளார். நீண்ட தூரம் சென்று நிலத்தின் மீதான எதிரிகளின் அச்சுறுத்தலை முறியடிக்கும் வகையில், இந்த சோதனை முதன்முறையாக நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்திய கடற்படையின் பலத்தை இந்த வெற்றி மேலும் அதிகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள டி.கே. ஷர்மா, இதன் மூலம், இத்தகைய ஏவுகணைகளைக் கொண்டுள்ள வெகு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்திய - ரஷ்ய கூட்டு தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணையின் சோதனை வெற்றி, இந்திய பாதுகாப்புத் துறையில் முக்கிய மைல் கல் என கருதப்படுகிறது.