சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 26 வீரர்கள் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் சாலை திறப்பு விழா ஒன்றிற்காக மத்திய ரிசர்வ் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆயுதங்களுடன் அங்கு வந்த நக்சலைட்டுகள், வீரர்களை நோக்கி சுடத் தொடங்கினர். இந்த தாக்குதலில் 26 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த வீரர்கள் ராய்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தாக்குதல் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளனர். இதனிடையே, டெல்லியில் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்த சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் ராய்பூர் திரும்பினார்.