ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்தார் பழனிச்சாமி! April 23, 2017

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்தார் பழனிச்சாமி!


டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார். அப்போது போராட்டத்தை விவசாயிகள் போராட்டத்தை கைவிடக்கோரி அவர்களிடம், வலியுறுத்தினார் முதல்வர் பழனிச்சாமி.

விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் 41 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

நாள்தோறும் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், நேற்று சிறுநீர் குடிக்கும் போராட்டத்தையும் நடத்தினர். இந்நிலையில், டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 7.30 மணி அளவில், தமிழக விவசாயிகளை சந்தித்து பேசினார். 

அபோது விவசாயிகள் கோரிக்கைகளை மத்தியர அரசிடம் வலியுறுத்துவதப் போவதாகவும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி பிரதமரிடம் வலியுறுத்தப்படும் எனவும் முதல்வர் பழனிச்சாமி கூறினார். 

மேலும் 41 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு தமிழகம் திரும்ப வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். 

Related Posts: